இறங்கி அடித்த BSNL.. 80 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா.. வெறும் ரூ.485 போதும்.. மற்ற சலுகைகள்?
பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்கள் 2 மாதங்களுக்கும் மேல் ரீசார்ஜ் செய்ய விரும்பினால், ரூ.600 பட்ஜெட்டுக்குள் கிடைக்கும் இந்த 2 ப்ரீபெய்ட் திட்டங்களை (Prepaid Plan) கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இருப்பினும், சலுகைகளை பார்த்துவிட்டுதான் முடிவு எடுப்போம் என்று கேட்டால், அவர்களுக்கு முழு விவரங்களையும் கொடுத்துள்ளோம். இந்த திட்டங்கள் 80 மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டியில் வாய்ஸ் கால்கள் (Voice Calls), டேட்டா (Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகளை கொடுக்கிறது.
முதலாவது ப்ரீபெய்ட் திட்டம், ரூ.485 மதிப்பில் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் தினசரி டேட்டா (Daily Data) சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, 80 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு பிறகும் ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy) டேட்டாவை பெற்று கொள்ளலாம்.

அதாவது, நாளொன்றுக்கு ஒதுக்கப்பட்ட டேட்டாவை முழுவதும் பயன்படுத்திய பிறகு, அடுத்த நாள் வரும் வரையில் 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை தொடர்ந்து கொடுக்கப்படும். ஆகவே, 80 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் டேட்டா தொடர்ந்து கிடைக்கும். இந்த தினசரி டேட்டா சலுகையை போலவே 100 எஸ்எம்எஸ்கள் நாளொன்றுக்கு அனுப்ப கிடைக்கிறது.
இந்த லிமிட்டுக்கு பிறகு அடுத்த நாள் மட்டுமே எஸ்எம்எஸ்கள் செய்ய கிடைக்கும். இந்த டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளுக்கு அடுத்து வாய்ஸ் கால்கள் சலுகைகள் குறையில்லாமல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ள முடியும். லோக்கல் கால்கள் இருக்கின்றன.
மேலும், எஸ்டிடி மற்றும் நேஷனல் ரோமிங் வாய்ஸ் சலுகைகளும் கிடைக்கிறது. 80 நாட்கள் வேலிடிட்டிக்கு இந்த திட்டம் பக்கா ஆப்ஷனாக இருக்கிறது. இதைவிட அதிக டேட்டா மற்றும் வேலிடிட்டியுடன் ரூ.600-க்குள் மற்றொரு திட்டம் இருக்கிறது. இது அதிகப்படியான டேட்டா தேவைப்படும் பிஎஸ்என்எஸ் கஸ்மர்களுக்கு பக்கா ஆப்ஷனாக இருக்கும்.
பிஎஸ்என்எல் ரூ.599 திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படும். இது முந்தைய திட்டத்தைவிட 4 நாட்கள் மட்டுமே அதிகமாக இருக்கிறது. ஆனால், விலை ரூ.100-க்கும் மேல் அதிகமாக இருக்கிறதே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் டேட்டாவை பார்த்தால் உங்களுக்கு அப்படி தோன்றாது. பரவாயில்லையேபா என்றே தோன்றும்.
ஆமாம், இந்த திட்டத்தில் 3 ஜிபி டேட்டாவை (3GB Data) பெற்று கொள்ளலாம். அதுவும் தினசரிக்கு 3 ஜிபி வீதம் 84 நாட்கள் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 3 ஜிபிக்கு பிறகும் முந்தைய திட்டத்தில் கிடைத்த ஃபேர் யூசேஜ் பாலிசி டேட்டா கொடுக்கப்படுகிறது. 40 கேபிபிஎஸ் வேகத்தில் உங்களுக்கு போஸ்ட் டேட்டா (Post Data) சலுகை கிடைக்கும்.
இப்படி டேட்டா சலுகையிலேயே கஸ்டமர்களை மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது, இந்த ப்ரீபெய்ட் திட்டம். இதில், மேலும் பல்வேறு சலுகைகள் இருக்கின்றன. டேட்டா மட்டும் அதிகப்படியாக கிடைக்காமல், வாய்ஸ் கால்களும் அன்லிமிடெட்டாக இருக்கின்றன. முந்தைய திட்டத்தை போல அன்லிமிடெட் லோக்கல் கால்களை (Unlimited Local Calls) பண்ணலாம்.
அதேபோல எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் எஸ்டிடி (Unlimited STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming Calls) செய்து கொள்ள முடியும். எஸ்எம்எஸ் சலுகையை பொறுத்தவரையில், வழக்கமான முறையில் நாளொன்றுக்கு 100 வீதம் கொடுக்கப்படுகிறது. அதிக டேட்டாவுக்கு இந்த திட்டமும், 80 நாட்களுக்கு முந்தைய திட்டமும் பக்கா ஆப்ஷனாகும்.


Click it and Unblock the Notifications








