BSNL கிட்டயேவா.. வெறும் ரூ.48 போதும்.. 30 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. மாத கடைசிக்கு கரெக்ட்!
டெலிகாம் மார்கெட்டில் எந்தவொரு நிறுவனமும் கொடுக்க முடியாத கம்மி விலையில் 30 நாட்கள் வேலிடிட்டி மற்றும் வாய்ஸ் கால் சலுகைகளை பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் வழங்குகிறது. இந்த திட்டம் மிக குறைவான விலையில் சர்வீஸ் வேலிடிட்டி கொடுக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.
பிஎஸ்என்எல் நிறுவனம், அடுத்த சில வாரங்களில் முதல்கட்ட 4ஜி சேவையை தொடங்குகிறது. இதனால், அந்த நிறுவனம் வழங்கும் திட்டங்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், அந்த நிறுவனமே மிகவும் மலிவான விலைக்கு சர்வீஸ் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை வைத்திருக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 48 திட்ட விவரங்கள் (BSNL Rs 48 Plan Deatils): ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற எந்த நிறுவனங்களிலும் கிடைக்காத சர்வீஸ் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் 30 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.
இந்த நாட்களில் இன்கமிங் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை பெற்று கொள்ளலாம். அதேபோல வாய்ஸ் கால் சலுகைகள் கிடைக்கிறது. அதாவது, ரூ.10 மதிப்பில் டாக்டைம் வேல்யூ கொடுக்கப்படுகிறது. இந்த டாக்டைம் மூலம் அவுட்கோயிங் கால்களை செய்து கொள்ளலாம். ஒரு நிமிடத்துக்கு 10 பைசா மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
இதில் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள் அடங்கும். மிகவும் மலிவான விலைக்கு இந்த திட்டம் கிடைப்பதால், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படவில்லை. இருப்பினும், சிம் ஆக்டிவாக வைத்திருக்க வெறும் ரூ.48 மட்டுமே போதும் என்பதால், இது மிகுந்த நன்மை கொண்ட திட்டமாகவே தோன்றுகிறது.
இதுவே உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டெய்லி டேட்டா சலுகைகள் வேண்டும் என்றால், ரூ 87 விலையில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால், அதில் சற்று வேலிடிட்டி குறைவாக கொடுக்கப்படும். இந்த திட்டம் குறித்த விவரங்களை இப்போது பார்ப்போம்.
பிஎஸ்என்எல் ரூ 87 திட்ட விவரங்கள் (BSNL Rs 87 Plan Deatils): இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் சலுகையை தவிர மற்ற சலுகைகளான அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டெய்லி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு 14 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.
அதோடு நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 14 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டாவை முழுவதும் பயன்படுத்தினாலும், 40 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டாவை பயன்படுத்த முடியும். அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம்.
இதே வேலிடிட்டியுடன் ரூ 97 விலையில் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் அதிகப்படியான டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதோடு லோக்துன் கன்டென்ட்டையும் (Lokdhun Content) வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த திட்டத்தில் என்னென்ன சலுகைகள் கொடுக்கப்படுகிறது என்பதை இப்போது பார்ப்போம்.
பிஎஸ்என்எல் ரூ 97 திட்ட விவரங்கள் (BSNL Rs 97 Plan Details): இதுவொரு டேட்டா வவுச்சர் (Data Voucher) திட்டமாகும். இருப்பினும், வாய்ஸ் கால் சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 30 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது.

இந்த தினசரி டேட்டா 2 ஜிபியை முழுவதும் பயன்படுத்திவிட்டாலும், 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. அதோடு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை வாடிக்கையாளர்கள் செய்து கொள்ள முடியும். இந்த சலுகைகள் போக லோக்துன் கன்டென்ட் சப்ஸ்கிரிப்ஷனை பயன்படுத்தி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








