பிஎஸ்என்எல் தடாலடி.. ஒரே திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள், ஓடிடி சந்தா.. வேற பிளானே கிடைக்காது!
ஒரே ரீசார்ஜில் 6500 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 300 எம்பிபிஎஸ் வேக இன்டர்நெட், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட 7 ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷன் போன்ற பிரம்மாண்ட சலுகைகளை கொண்ட பிஎஸ்என்எல்லின் திட்டத்தை (BSNL Plan) பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்களே மூக்கில் விரல் வைக்கும்படியான சலுகைகளை கொண்ட திட்டமாக, பிஎஸ்என்எல் ரூ 4799 பிளான் (BSNL Rs 4799 Plan) இருக்கிறது. ஒரே நேரத்தில் டிவி, மொபைல், லேப்டாப் போன்ற டிவைஸ்களுக்கு இன்டர்நெட், ஓடிடி சப்ஸ்கிரிப்சன், அன்லிமிடெட் லோக்கல் எஸ்டிடி கால்கள் போன்ற சலுகைகளை இந்த திட்டம் வழங்குகிறது.

பிஎஸ்என்எல் ரூ 4799 பிளான் விவரங்கள் (BSNL Rs 4799 Plan Details): இதுவொரு பிராட்பேண்ட் திட்டமாகும். இந்த திட்டத்தில் அதிகப்படியான டேட்டா மட்டுமல்லாமல், ஓடிடி மற்றும் வாய்ஸ் காலிங் கனெக்சன் சலுகையும் வழங்கப்படுகிறது. அதாவது, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு 300 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கும்.
மொத்தமாக 6,500 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். இது பிராட்பேண்ட் திட்டம் என்பதால், இன்டர்நெட் வேகத்தில் துளியும் குறைவிருக்காது. அதோடு, டிவி, மொபைல், லேப்டாப் போன்ற பல டிவைஸ்களை கனெக்ட் செய்து ஒரே நேரத்தில் அதிவேக இன்டர்நெட்டை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஒரு நாளைக்கு இவ்வளவு டேட்டாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் கிடையாது. ஆகவே, தடையில்லா இன்டர்நெட்டை பயன்படுத்தலாம். சொல்லப்போனால், ஒரு நாளைக்கு 200 ஜிபி பயன்படுத்தினாலும், 30 நாட்களுக்கான டேட்டா தொடர்ந்து கிடைக்கும். ஒருவேளை நீங்கள் 6500 ஜிபி டேட்டாவை பயன்படுத்திவிட்டாலும், 40 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து இன்டர்நெட் கிடைக்கும்.
அதை வேலிடிட்டி முடியும் வரையில் பயன்படுத்திக் கொள்ளலாம். இது மட்டுமல்லாமல், 7 ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷனும் வழங்கப்படுகிறது. அந்த வகையில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), லயன்ஸ்கேட் எல்எல்பி (Lions Gate LLP), ஷெமரூமீ (ShemarooMe), ஹங்கமா (Hungama), சோனிலிவ் பிரீமியம் (SonyLIV Premium), ஜீ5 பிரீமியம் (Zee5 Premium) மற்றும் யூப்டிவி (YuppTV) ஆகிய ஓடிடி தளங்களை 30 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அதோடு ப்ரீ பிக்ஸ்ட்-லைன் வாய்ஸ் காலிங் (Free Fixed-line Voice Calling) கனெக்சன் வழங்கப்படும். இதன் மூலம் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையை பெற்றுக்கொள்ளலாம். இதில் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்கள் அடங்கும். இப்படி ஏராளமான சலுகைகள் கிடைக்கிறது. ஒரே நேரத்தில் பல டிவைஸ்களை பயன்படுத்த தேவை இருக்கும், நபர்களுக்கு இந்த திட்டம் பொருத்தமானதாக இருக்கும்.
இதேபோல சலுகைகளுடன் விலை குறைவான பிராட்பேண்ட் திட்டம் வேண்டுமென்றால், ரூ.2,799 மதிப்பில் மற்றொரு திட்டம் இருக்கிறது. அதைப்பற்றி இப்போது, தெரிந்து கொள்வோம். இந்த திட்டத்துக்கும் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதிலும் டேட்டா, ஓடிடி மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை வழங்கப்படுகிறது.
அந்த வகையில், 300 எம்பிபிஎஸ் வேகத்தில் இன்டர்நெட் கிடைக்கும். மொத்தமாக 5000 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த டேட்டாவை முழுமையாக பயன்படுத்திய பின்பு வேலிடிட்டி முடியும் வரையில் 30 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம். அதோடு லேண்ட்லைன் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கும்.
இதன் மூலம் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்களை செய்து கொள்ளலாம். மேலும், இந்த திட்டத்தில் ஓடிடி சலுகைகளும் கிடைக்கிறது. ஆகவே, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், லயன்ஸ்கேட் எல்எல்பி, ஷெமரூமீ, ஹங்கமா, சோனிலிவ் பிரீமியம், ஜீ5 பிரீமியம் மற்றும் யூப்டிவி ஆகிய தளங்களின் சப்ஸ்கிரிப்ஷனை பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications