கதையே வேற.. BSNL ஃபைபர்.. ரூ.499 போதும்.. 30 எம்பிபிஎஸ் டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. லேண்ட்லைன் கனெக்சன்!
இவ்வளவு கம்மியா எப்படிங்க முடியுது? என்று வியக்கும் விதமாக வெறும் ரூ 449 திட்டத்தில் 30 எம்பிபிஎஸ் வேக அன்லிமிடெட் டேட்டா, லேண்ட்லைன் கனெக்சன் மூலம் லோக்கல், எஸ்டிடி வாய்ஸ் கால் சலுகைகளை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்குகிறது. ஓடிடி சலுகையும் கிடைக்கிறது.
இதுபோல ரூ 449 முதல் 799 வரையில் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் ஓடிடி சலுகைகள் கொண்ட பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் திட்டங்கள் (BSNL Bharat Fibre Plans) இருக்கின்றன. மொத்தமாக 4 திட்டங்களை இங்கே கொடுத்துள்ளோம். இந்த ஃபைபர் திட்டங்களின் முழு சலுகை விவரங்கள் இதோ.

பிஎஸ்என்எல் ரூ 449 திட்ட விவரங்கள் (BSNL Rs 449 Plan Details): இதுவொரு பேஸிக் ஃபைபர் திட்டமாகும். இருப்பினும், விலையை விட கூடுதலாக டேட்டா, லேண்ட் லைன் போன்ற சலுகைகள் கிடைக்கின்றன. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 30 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.
அதிகபட்சமாக 3300 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். இந்த டேட்டாவுக்கு பிறகு 4எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவை கொடுக்கப்படும். இதுபோக லோக்கல், எஸ்டிடி வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். இதைவிட கூடுதல் வேகம் வேண்டுமானால், ரூ 599 விலையில் கிடைக்கும் ஃபைபர் திட்டத்தை தேர்ந்தெடுங்கள்.
பிஎஸ்என்எல் ரூ 599 திட்ட விவரங்கள் (BSNL Rs 599 Plan Details): இதுவொரு ஃபைபர் பேஸிக் பிளஸ் (Fibre Basic Plus) திட்டமாகும். இந்த திட்டத்தில் 60 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவை கொடுக்கப்படுகிறது. ஆகவே, மொத்தமாக 3300 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த டேட்டா தீர்ந்துவிட்ட பிறகு முந்தைய திட்டத்தை போலவே 4 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல லேண்ட் லைன் மூலம் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். இதே சலுகைகளுடன் ஓடிடி சலுகையும் வேண்டுமானால், ரூ 699 திட்டம் சரியாக இருக்கும்.
பிஎஸ்என்எல் ரூ 666 திட்ட விவரங்கள் (BSNL Rs 666 Plan Details): இந்த திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல், ஓடிடி சலுகையும் கிடைக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 60 எம்பிபிஎஸ் வேகத்தில் அதிகபட்சமாக 3300 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.
அதேபோல 4 எம்பிபிஎஸ் ஃபேர் யூசேஜ் பாலிசி டேட்டா கிடைக்கிறது. முந்தைய திட்டங்களை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி வாய்ஸ் கால் சலுகைகள் கிடைக்கிறது. இதுபோக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) ஓடிடி தளத்தில் சந்தாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதைவிட அதிவேக டேட்டா, கூடுதல் ஓடிடி வேண்டுமானல், பின்வரும் திட்டம் சரியாக இருக்கும்.
பிஎஸ்என்எல் ரூ 799 திட்ட விவரங்கள் (BSNL Rs 799 Plan Details): இந்த ஃபைபர் திட்டத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா மட்டுமல்லாமல், சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (Zee5), யூப்டிவி (YuppTV) ஆகிய தளங்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. 100 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம்.
அதிகபட்சமாக 1000 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். இந்த டேட்டாவுக்கு பிறகு 5 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா வேகம் குறைக்கப்படும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி லேண்ட்லைன் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். ரூ.800-க்குள் ஃபைபர் திட்டங்கள் வேண்டுமானால், இந்த திட்டங்களை தேர்ந்தெடுங்கள். அனைத்து திட்டங்களுக்கும் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








