Home
News

90 நாட்களுக்கு 1 ரீசார்ஜ்.. மலிவு விலைக்கு இறக்கிய BSNL.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 5 ஜிபி டேட்டா!

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் ஜிபி2 (GP2) கஸ்டமர்களுக்கு மலிவான விலைக்கு 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், லம்ப்-சம் டேட்டா சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களை ஒப்பிடுகையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மலிவு விலைக்கு ரீசார்ஜ் திட்டங்கள் கிடைக்கின்றன. இதில் மலிவான விலைக்கு அதிக சிம் ஆக்டிவ் கொடுக்கும் திட்டமாக பிஎஸ்என்எல் ரூ. 499 திட்டம் (BSNL Rs. 499) இருக்கிறது.

90 நாட்களுக்கு 1 ரீசார்ஜ்.. மலிவு விலைக்கு இறக்கிய BSNL.. அன்லிமிடெட்!

பிஎஸ்என்எல் ரூ. 449 திட்ட விவரங்கள் (BSNL Rs 449 Plan Details): ஜிபி2 கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த ப்ரீபெய்ட் திட்டம் கிடைக்கும். 90 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கும்.

ஆனால், தினசரிக்கு டேட்டா கிடைக்காது. மொத்தமாகவே 5 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்படும். இந்த டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். இந்த திட்டம் மற்ற நிறுவனங்களைவிட மலிவான விலைக்கு கிடைக்கிறது. ஒருவேளை தினசரி டேட்டா வேண்டுமானால், மற்றொரு திட்டம் இருக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ. 485 திட்ட விவரங்கள் (BSNL Rs. 485 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் தினசரி டேட்டா கிடைக்கும். ஆகவே, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த டேட்டாவுக்கு பிறகும் முந்தைய திட்டத்தை போலவே போஸ்ட் டேட்டா கிடைக்கும். 40 கேபிபிஎஸ் வேகத்தில் பயன்படுத்தலாம்.

72 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், இதில் 144 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் மொத்தமாக பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும், இதில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகையும் கொடுக்கப்பட்டு உள்ளது. முந்தைய திட்டத்தை போலவே நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையையும் கொடுத்துள்ளது.

இதைவிட அதிக வேலிடிட்டி மற்றும் அதிக போஸ்ட் டேட்டா வேண்டுமானால், மற்றொரு திட்டம் கிடைக்கிறது. இதில் வேலிடிட்டி அதிகமாகவும், டேட்டா குறைவாகவும் கிடைக்கும். ஆனால், தினசரி டேட்டாவுடன் கிடைப்பதால் கஸ்டமர்களுக்கு நல்ல லாபத்துடன் கிடைக்கும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ. 498 திட்ட விவரங்கள் (BSNL Rs 498 Plan Details): ரூ.500 விலைக்குள் பெஸ்ட் திட்டமாக இது இருக்கிறது. இதில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. மற்ற ப்ரீபெய்ட் திட்டங்களில் 40 கேபிபிஎஸ் வேகத்தில் மட்டுமே போஸ்ட் டேட்டா கிடைக்கும். ஆனால், இதில் 80 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது.

இந்த திட்டத்துக்கு 82 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, 1.5 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 123 ஜிபி டேட்டாவ கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். முந்தைய திட்டத்தில் கிடைத்த அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகையும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. அதேபோல 100 எஸ்எம்எஸ் சலுகையும் கொடுக்கப்பட்டு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 449 Plan 90 Days Validity Local STD Roaming Calls 5GB Data Check GP2 Customers Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X