சலாம் BSNL பாய்.. இவ்ளோ சீப் ஆன விலைக்கு 90 நாட்களுக்கு SMS, Voice Call-ஆ.. கப்சிப் ஆன ஜியோ, ஏர்டெல்!
டிராய் (TRAI) புண்ணியத்தால் ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் அண்ட் எஸ்எம்எஸ் ஒன்லி பிளான்கள் கிடைத்துள்ளன. டெய்லி டேட்டா அல்லது டோட்டல் டேட்டா என, ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் எந்தவொரு டேட்டா நன்மையையும் தேவைப்படாத கஸ்டமர்கள், தங்கள் சிம் கார்டுகளை குறைந்த செலவில் நீண்ட நாட்களுக்கு ஆக்டிவ் ஆக வைத்துக்கொள்ள இந்த பிளான்கள் உதவுகின்றன.
முதலில் முகேஷ் (Mukesh Ambani) அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது, ரூ.458 மற்றும் ரூ.1958 க்கு 2 புதிய வாய்ஸ் அன்ட் எஸ்எம்எஸ் ஒன்லி பிளான்களை (Jio Voice and SMS Only Plans) அறிமுகம் செய்தது. பின்னர் இவ்விரு திட்டங்களும் எதிர்பார்த்த அளவிற்கு மலிவான திட்டங்களாக இல்லை என்பதால்.. ரூ.458 ஆனது ரூ.448 ஆகவும், ரூ.1958 ஆனது ரூ.1748 ஆகவும் விலை குறைக்கப்பட்டன.

இதேபோல ஏர்டெல் நிறுவனத்தின் என்ட்ரி லெவல் வாய்ஸ் அண்ட் எஸ்எம்எஸ் ஒன்லி பிளானாக (Airtel Voice and SMS Only Plan) அறிமுகமான ரூ.499 ஆனது ரூ.469 ஆக விலை குறைக்கப்பட்டது. விலையில் வேறுபாடு இருந்தாலும் ஜியோவின் ரூ.448 மற்றும் ஏர்டெல்லின் ரூ.469 ஆகிய இரண்டுமே ஒரே மாதிரியான வேலிடிட்டி உடன் வருகின்றன; இரண்டுமே 84 நாட்களுக்கு செல்லுபடி (84 Days Validity) ஆகும்.
ஒப்பீட்டளவில் ஏர்டெல்லை விட ஜியோவின் திட்டம் தான் சீப் ஆக இருக்கிறது. இந்த இடத்தில் தான் "சலாம் ராக்கி பாய்" என்கிற பிஜிஎம் -ஐ போட்டுகொண்டு பிஎஸ்என்எல் (BSNL) உள்ள வருகிறது. அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த டெலிகாம் நிறுவனத்திடம் உள்ள ஒரு வாய்ஸ் அண்ட் எஸ்எம்எஸ் ஒன்லி பிளான் (BSNL Voice and SMS Only Plan) ஆனது.. ஜியோவின் ரூ.448 மற்றும் ஏர்டெல்லின் ரூ.469 ஆகிய இரண்டையுமே தூக்கி சாப்பிடுகிறது.
அது பிஎஸ்என்எல்-ன் ரூ.439 திட்டம் (BSNL Rs 439 Plan) ஆகும். இந்த திட்டத்தின் விலை ஜியோவை விட ரூ.9 மலிவாகவும், ஏர்டெல்லை விட ரூ.30 மலிவாகவும் இருப்பது மட்டுமின்றி, இது ஜியோ மற்றும் ஏர்டெல்லை விட அதிக நாள் வேலிடிட்டியையும் வழங்குகிறது. பிஎஸ்என்எல்-ன் ரூ.439 திட்டமானது 3 மாதங்கள் அல்லது 90 நாட்கள் என்கிற வேலிடிட்டி (90 Days Validity) உடன் வருகிறது. இந்த 90 நாட்களுக்கும் இதன்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.
ஜியோவின் ரூ.448 வாய்ஸ் அண்ட் ஒன்லி பிளானின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இதன்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 1000 இலவச எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ரூ.448-ன் கீழ் கிடைக்கும் கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகிய ஜியோ ஆப்களுக்கான இலவச அணுகல்களை வழங்கும்
ஏர்டெல்லின் ரூ.469 வாய்ஸ் அண்ட் எஸ்எம்எஸ் ஒன்லி பிளானிங் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 900 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். கூடுதலாக ஏர்டெல் ரிவார்ட்ஸின்கீழ் 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸும் கிடைக்கும்.
ஏர்டெல் சேவையின் கீழ் ரூ.1849 மதிப்புள்ள இன்னொரு வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டமும் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3600 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். கூடுதலாக ஏர்டெல் ரிவார்ட்ஸின்கீழ் 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








