Home
News

Airtel, Jio கண்ணில் விரல்விட்டு ஆட்டும் BSNL! 90 நாள் வேலிடிட்டியுடன் கம்மி காசில் இப்படி ஒரு திட்டமா?

BSNL நிறுவனம் அதன் பயனர்களுக்கு குறைந்த விலையில் பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம், இப்போது புதிதாக ஒரு வித்தியாசமான 90 நாள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

டேட்டாவை மையமாகக் கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களால் ஆதிக்கம் செலுத்தும் சகாப்தத்தில், BSNL (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) ஒரு தனித்துவமான புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறிப்பாக டேட்டா நன்மை தேவைப்படாத மற்றும் குரல் அழைப்புக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கும் வாடிக்கையாளர்களை கவரும் நோக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Airtel, Jio கண்ணில் விரல்விட்டு ஆட்டும் BSNL!

BSNL நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய திட்டம் ரூ.439 விலையில் வருகிறது. இந்த புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் 90 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. இது நீண்ட கால செல்லுபடியுடன், செலவு குறைந்த குரல் வவுச்சரைத் தேடும் பயனர்களுக்கு சிறந்த திட்டமாக அமைகிறது. இதில் டேட்டா பலன்கள் இல்லை என்றாலும், இந்தத் திட்டத்தில் 300 மெசேஜ்கள் SMS கொடுக்கப்பட்டுள்ளன. BSNL இன் ரூ. 439 திட்டத்தின் விவரங்கள் மற்றும் நன்மைகளை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.

முதன்மையாக குரல் அழைப்பை நம்பியிருக்கும் நபர்களுக்கு இது ஏன் சிறந்த தேர்வாக இருக்கிறது என்பதை பற்றி தெரிந்துகொள்வது அவசியமானது. BSNL இன் ரூ.439 திட்டம் குறிப்பிட்ட இலக்கு கொண்ட பயனர்களை மனதில் வைத்து கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. வாய்ஸ் கால்ஸ் நன்மைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் பயனர்கள் இந்த திட்டத்தை செக் செய்யலாம். இதில் டேட்டா பலன்கள் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

இது 90 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன், இந்த ப்ரீபெய்ட் திட்டம் சந்தாதாரர்கள் நீண்ட காலத்திற்கு தடையில்லா வாய்ஸ் கால் அனுபவத்தை வழங்குகிறது. இரண்டாம் நிலை சிம் ஆக உங்களிடம் பிஎஸ்என்எல் சிம் இருக்கிறது என்றால், இதை ட்ரை செய்து பார்க்கலாம். இது 300 எஸ்எம்எஸ் நன்மைகளை கொண்டுள்ளது. பயனர்கள் டெக்ஸ்ட் மெசேஜ் மூலம் இணைந்திருக்க உதவும் நன்மையை இது வழங்குகிறது.

Airtel, Jio கண்ணில் விரல்விட்டு ஆட்டும் BSNL!

BSNL இன் ரூ.439 திட்டம் நேரடியான அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. இந்த திட்டத்துடன் தொடர்புடைய மறைக்கப்பட்ட கட்டணங்கள் அல்லது சிக்கலான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்று எதுவுமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், பயனர்கள் எந்த குழப்பமும் இல்லாமல் பலன்களைப் புரிந்துகொள்வதையும் பெறுவதையும் இது எளிதாக்குகிறது. இது 90 நாள் செல்லுபடியாகும் காலம், சந்தையில் கிடைக்கும் பிற ப்ரீபெய்ட் விருப்பங்களிலிருந்து இந்தத் திட்டத்தை வேறுபடுத்துகிறது.

நீட்டிக்கப்பட்ட காலத்துடன், சந்தாதாரர்கள் அடிக்கடி ரீசார்ஜ் செய்வதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை, இது வசதி மற்றும் மன அமைதியை வழங்குகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விரைவில் அறிமுகப்படுத்த முயற்சித்து வருகிறது. அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் அதிக வருவாய் ஈட்டும் திறனைக் கொண்டிருக்கும். ஆனால், விரைவில் 4G உடன் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 439 Prepaid Plan With 90 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X