Home
News

சொல்லி அடிச்ச BSNL.. மாசத்துக்கு ரூ.146 போதும்.. 90 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. இனிமே குஷிதான்!

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் இப்போதுதான் வாய்ஸ் ஒன்லி திட்டத்தை களமிறங்கி வருகின்றன. ஆனால், மத்திய தொலைத்தொடர்பு துறையின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, ஆரம்பத்தில் இருந்தே வாய்ஸ் ஒன்லி திட்டத்தை கொடுத்து வருகிறது. இதில் மற்ற நிறுவனங்கள் கொடுக்க முடியாத விலைக்கு ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) வைத்திருக்கிறது. மாதத்துக்கு வெறும் ரூ.146 போதும் 90 நாட்களுக்கு வேலிடிட்டியுடன் வாய்ஸ் கால் சலுகைகளை பெற்று கொள்ளலாம்.

இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டமானது, வெறும் வாய்ஸ் கால்கள் மட்டுமே கொடுக்காது. எஸ்எம்எஸ் சலுகைகளையும் கொடுக்கிறது. ஆனால், அந்த எஸ்எம்எஸ் சலுகை லம்ப்-சம் முறையில் கொடுக்கப்படும். ஆகவே, 90 நாட்கள் வேலிடிட்டிக்கு மொத்தமாக சேர்த்து எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும். இதை தினசரிக்கு இல்லாமல், உங்களுக்கு தேவைப்படும்போது அனுப்பி கொள்ளலாம்.

சொல்லி அடிச்ச BSNL! மாசத்துக்கு ரூ.146 போதும்.. 90 நாட்கள் வேலிடிட்டி!

பிஎஸ்என்எல் ரூ 439 திட்டம் விவரங்கள் (BSNL Rs 439 Plan Details): இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு முன்பே சொன்னதை போல 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, மூன்று மாதங்கள் முழுவதும் பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் நேஷனல் ரோமிங் கால்களை (National Roaming Calls) செய்யலாம்.

இந்த 90 நாட்களுக்கும் சேர்த்து 300 எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இதை தேவைக்கு ஏற்ப பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகைகள் மற்றும் விலையை வைத்து பார்க்கையில், மாதத்துக்கு வெறும் ரூ.146 செலவில் இந்த சலுகைகள் கிடைக்கிறது. இதில் சிம் ஆக்டிவ் 90 நாட்களுக்கு கிடைத்துவிடுகிறது. ஆகவே, அதிக லாபம் கொண்ட திட்டமாக இருக்கிறது.

இது வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் போதும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு பக்கா ஆப்ஷனாக இருக்கும். இதேபோல வேலிடிட்டி மற்றும் விலையில் டேட்டாவுடன் ப்ரீபெய்ட் திட்டம் வேண்டுமானால் மற்றொரு திட்டம் இருக்கிறது. இது கொஞ்சம் விலை கூடுதலாக இருந்தாலும், அதைவிட அதிகப்படியான சலுகைகளையே கொடுக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 485 திட்டம் விவரங்கள் (BSNL Rs 485 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டம் வாய்ஸ் ஒன்லி ஆப்ஷனில் கிடைக்கவில்லை. ஆகவே, இதை ரீசார்ஜ் செய்தால், வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கும். அதுவும் தினசரி லிமிட்டில் சலுகைகளை பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, டேட்டா சலுகையானது தினசரிக்கு 2 ஜிபி கணக்கில் கிடைக்கிறது.

இந்த தினசரி டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகை வருகிறது. முந்தைய திட்டத்தைவிட 10 நாட்கள் கம்மியாக மட்டுமே வேலிடிட்டி கொடுக்கிறது. ஆகவே, 80 நாட்களுக்கு டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் வருகிறது. இதில் வாய்ஸ் கால்கள் முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் சலுகையில் கிடைக்கிறது.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் எஸ்எம்எஸ் சலுகையும் வழக்கம்போல கிடைக்கிறது. லம்ப்-சம் முறையில் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. தினசரிக்கு 100 என்னும் கணக்கில் லோக்கல், எஸ்டிடி எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். 80 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், 160 ஜிபி டேட்டாவை மொத்தமாக பெற்று கொள்ளலாம்.

இந்த 2 திட்டங்களில் வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா அடிப்படையில் சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால், ஒவ்வொரு திட்டமும் சலுகைகளின்படி பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு லாபம் தரக்கூடியதாகவே இருக்கின்றன. ஆகவே, இதில் உங்களது தேவைக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதுபோன்ற செய்திகளுக்கு பின்தொடருங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 439 Plan With Unlimited Voice Calls 90 Days Validity Check Cheapest Voice Only Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X