BSNL-க்கு போடு கும்பிடு.. மாதம் ரூ.146 போதும்.. 90 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 300 எஸ்எம்எஸ்கள்!
பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்களுக்கு மாதம் ரூ.146 செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மட்டுமல்லாமல், 90 நாட்கள் வேலிடிட்டி (90 Days Validity) மற்றும் சிம் ஆக்டிவ் (SIM Active) கிடைக்கிறது. மலிவான விலைக்கு கிடைக்கும் 3 மாத திட்டமாக (3 Months Plan) இது இருக்கிறது. இதேபோல நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கொண்ட திட்டத்தில் 72 நாட்கள் வேலிடிட்டியும் கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் (Prepaid Plans) முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ 439 திட்ட விவரங்கள் (BSNL Rs 439 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 90 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆகவே, 3 மாதங்களுக்கு சிம் ஆக்டிவ் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கிறது. தினசரி டேட்டா மற்றும் தினசரி எஸ்எம்எஸ்கள் கிடைக்காது.

இருப்பினும, லம்ப்-சம் சலுகையில் எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன. ஆகவே, 90 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 300 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இதில் டேட்டா சலுகையே கிடையாது. ஆகவே, இதுவொரு வாய்ஸ் ஒன்லி திட்டமாக (Voice Only Plan) இருக்கிறது. இந்த விலைக்கு மற்ற நிறுவனங்களில் 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்காது.
இந்த வாய்ஸ் ஒன்லி திட்டமானது, செகண்டரி சிம் கார்டாக பிஎஸ்என்எல் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு மலிவான விலைக்கு சிம் ஆக்டிவ் கொடுக்கும்படி இருக்கிறது. அதேபோல டேட்டா தேவைப்படாமல், வாய்ஸ் கால்கள் மட்டும் போதும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு பொருத்தமாக இருக்கிறது. ஒருவேளை டேட்டா சலுகை வேண்டுமானால், அடுத்த திட்டம் சரியாக இருக்கும்.
பிஎஸ்என்எல் ரூ 485 திட்ட விவரங்கள் (BSNL Rs 485 Plan Details): இந்த திட்டத்தின் விலை அதிகமாக இருக்கிறது. அதேபோல வேலிடிட்டி முந்தைய திட்டத்தைவிட கொஞ்சம் குறைவாகவும் இருக்கிறது. ஏனென்றால், முந்தைய திட்டத்தில் 90 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தது. இதில் 72 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆனால், தினசரி டேட்டா இதில் இருக்கிறது.
ஆகவே, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம். இந்த 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா சலுகையை இந்த திட்டம் கொடுக்கிறது. ஆகவே, 72 நாட்கள் முழுவதும் 144 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், போஸ்ட் டேட்டாவை இலவசமாக பெற்று கொள்ளலாம். தினசரி எஸ்எம்எஸ் சலுகைகள் இதில் கிடைக்கிறது.
நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். வாய்ஸ் கால்கள் வழக்கம்போலவே முந்தைய திட்டத்தில் கிடைத்தது, இதிலும் கிடைக்கிறது. ஆகவே, அன்லிமிடெட் லோக்கல் கால்கள், எஸ்டிடி கால்கள் மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை இதில் கிடைக்கிறது. இந்த விலைக்கும் 72 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் மற்ற நிறுவனங்களில் கிடைக்காது.
இதைவிட மலிவான விலைக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் லம்ப்-சம் டேட்டாவுடன் திட்டம் வேண்டுமானால், ரூ.319 விலைக்கு மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இதில் தினசரி டேட்டா கிடைக்காது. ஆனால், லம்ப்-சலுகையில் டேட்டா கிடைக்கும். அதேபோல எஸ்எம்எஸ் சலுகையும் தினசரிக்கு கிடைக்கும். இந்த திட்டத்தின் விவரங்களை இப்போது பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ 319 திட்ட விவரங்கள் (BSNL Rs 319 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 60 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கும். இந்த வேலிடிட்டிக்கு மொத்தமாக 10 ஜிபி டேட்டா மற்றும் அந்த டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் உள்ளது.


Click it and Unblock the Notifications








