இறங்கி அடித்த பிஎஸ்என்எல்.. மாதம் ரூ.146 போதும்.. 90 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 300 எஸ்எம்எஸ்!
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, நாளுக்கு நாள் கஸ்டமர்களை தட்டித்தூக்கி வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களில் கிடைக்காத அடிமட்ட விலை மற்றும் அதிகப்படியான வேலிடிட்டியை கொடுத்து ஏழைக்கு ஏற்ற நிறுவனம் என்ற பெயரை தக்க வைத்து வருகிறது. இப்போது, பார்க்கப்போகும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களும் (Prepaid Plans) அப்படித்தான், அடிமட்ட விலையில் அதிகப்படியான சலுகைகளை கொடுக்கின்றன.
பிஎஸ்என்எல் ரூ 347 திட்ட விவரங்கள் (BSNL Rs 347 Plan Details): இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் போக கூடுதலாக பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

இந்த திட்டத்துக்கு 54 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், மொத்தமாக 108 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். டேட்டாவை போலவே நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ள முடியும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி (STD) வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். நேஷனல் ரோமிங் கால்களும் (National Roaming Calls) கிடைக்கிறது.
இந்த சலுகைகளுக்கு மேல் கூடுதலாக பல்வேறு சலுகைகளை பெற்று கொள்ளலாம். ஆகவே, சேலன்சர் அரினா மொபைல் கேம்ஸ் (Challenger Arena Mobile Games), ஹார்டி கேம்ஸ் (Hardy Games), கேம்ஆன் அஸ்ட்ரோடெல் (Gameon Astrotell) மற்றும் கேமியம் (Gameium) சலுகை கிடைக்கிறது. மேலும், ஜிங்க் மியூசிக் (Zing Music) மற்றும் வாவ் எண்டர்டெயின்மென்ட் (WOW Entertainment) வருகிறது.
பிஎஸ்என்எல் ரூ 399 திட்ட விவரங்கள் (BSNL Rs 399 Plan Details): இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா சேவை கம்மியாக கிடைக்கிறது. ஆனால், வேலிடிட்டி பட்டையை கிளப்புகிறது. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகையை பெற்று கொள்ளலாம்.
இந்த திட்டத்துக்கு 70 நாட்கள் வேலிடிட்டி வருவதால், 70 ஜிபி டேட்டாவை பெறலாம். முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. மேலும், நேஷனல் ரோமிங் கால்களையும் செய்து கொள்ளலாம். அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. மற்ற சலுகைகள் கிடையாது.
இந்த 2 திட்டங்களைவிட அதிக வேலிடிட்டி கொண்ட மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. மாதத்துக்கு வெறும் ரூ.146 செலவில் மூன்று மாதங்களுக்கான வேலிடிட்டியை கொடுக்கிறது. அடிமட்ட விலையில் சிம் ஆக்டிவ் சலுகை அதிக நாட்களுக்கு வேண்டுமானால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஆனால், கூடுதல் சலுகைகள் வராது.
பிஎஸ்என்எல் ரூ 439 திட்ட விவரங்கள் (BSNL Rs 439 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டம் முழுக்க முழுக்க அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகைக்கு வழங்கப்படுகிறது. ஆகவே, மற்ற சலுகைகளை எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. அதாவது, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 300 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது.
முந்தைய திட்டங்களை போலவே அன்லிமிடெட் லோக்கல் கால்கள், எஸ்டிடி மற்றும் நேஷனல் ரோமிங் கால்களை கொடுக்கிறது. இந்த சலுகைகள் மட்டுமே 90 நாட்களுக்கு கிடைக்கும். வாய்ஸ் கால்கள் போதும் வேறு சலுகை வேண்டாம் என்றால், இந்த திட்டம் அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. சிம் ஆக்டிவ் வருவதால், செகண்ட்ரி சிம் கார்டுக்கு இந்த திட்டம் பக்காவான தேர்வாகும்.


Click it and Unblock the Notifications