BSNL போட்ட போடு.. ரூ.150-க்கு வருது 90 நாட்கள்.. மாத செலவில் முடிச்சு விட்டாப்ல.. அன்லிமிடெட் வாய்ஸ்.. டேட்டா?
மூன்று மாதத்துக்கு அடிமட்ட விலையில் ப்ரீபெய்ட் திட்டம் வேண்டுமானால், இதைவிட மலிவான விலைக்கு வேறு எங்கும் திட்டம் கிடைக்காது. ஜியோ (Jio) நிறுவனம் மூக்கில் விரல் வைக்கும்படி பிஎஸ்என்எல் நிறுவனம் (BSNL) மாதத்துக்கு ரூ.150-க்கும் கம்மியான விலைக்கு 90 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. மினிமம் விலைக்கு 3 மாதம் சிம் ஆக்டிவ் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளையும் வாரி வழங்கி இருக்கிறது. இப்படி 2 திட்டங்கள் அடிமட்ட விலையில் இருக்கின்றன. இந்த திட்டங்களின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
டெலிகாம் (Telecom) கஸ்டமர்கள், 28 நாட்கள் அல்லது 56 நாட்கள் வேலிட்டி கொண்ட திட்டங்களைவிட 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களையே அதிகம் ரீசார்ஜ் செய்து வருகின்றனர். ஏனென்றால், மூன்று மாதங்களுக்கான திட்டங்கள் மட்டுமே விலைக்கு ஏற்பவும், மூன்று மாதங்களுக்கு எந்த ரீசார்ஜ் தேவை இல்லாமலும் இருக்கின்றன. இப்படிப்பட்ட 3 மாத திட்டங்களில் பிஎஸ்என்எல் மிரளவிட்டிருக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 439 திட்ட விவரங்கள் (BSNL Rs 439 Plan Details): ஏர்டெல் (Airtel), ஜியோ போன்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் அடிமட்ட விலைக்கு இந்த 3 மாத திட்டம் (3 Months Plan) கிடைக்கிறது. சொல்லப்போனால், 3 மாத திட்டங்களில் 84 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே கிடைக்கும். ஆனால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) 90 நாட்களுக்கு வேலிடிட்டி (90 Days Validity) கொடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் லம்ப்-சம் எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமே கிடைக்கிறது. டேட்டா சலுகைகள் கிடையாது. ஆகவே, மூன்று மாதங்கள் முழுவதும் பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Voice Calls) அன்லிமிடெட்டாக செய்து கொள்ள முடியும். அதேபோல 300 எஸ்எம்எஸ்கள் (300 SMS) லம்ப்-சம்மாக கொடுக்கப்படும்.
இந்த சலுகைகளை மட்டுமே பெற்று கொள்ள கிடைக்கிறது. 90 நாட்களுக்கு சிம் ஆக்டிவ் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் வேண்டுமானால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இதற்கான மாத செலவு ரூ.150 கூட கிடையாது, வெறும் ரூ.146-க்கு கிடைக்கிறது. இல்லை, டேட்டா சலுகையும் வேண்டும் என்றால், இதைவிட கொஞ்சம் கூடுதல் விலைக்கு மற்றொரு திட்டம் இருக்கிறது.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.485ஆக இருக்கிறது. இதற்கு ஏற்ப சலுகைகளையும் கஸ்டமர்கள் எதிர்பார்க்கலாம். அதாவது, முதலில் பார்த்த திட்டத்தில் இல்லாத டேட்டா சலுகை இந்த திட்டத்தில் கிடைக்கிறது. ஆகவே, 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகையுடன் 2 ஜிபி தினசரி டேட்டா சலுகை இந்த திட்டத்தில் கிடைக்கும். ஆனால், 80 நாட்கள் மட்டுமே இதற்கு வேலிடிட்டி கிடைக்கிறது.
ஆகவே, 160 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பெற முடியும். இந்த திட்டத்தில் லம்ப்-சம் எஸ்எம்எஸ்கள் கிடையாது. ஆனால், வழக்கமான திட்டங்களில் கிடைக்கும் 100 எஸ்எம்எஸ்கள் தினமும் கிடைக்கிறது. மீதமுள்ள வாய்ஸ் கால்கள் சலுகைகள் முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போலவே இருக்கின்றன. ஆகவே, அன்லிமிடெட் லோக்கல் கால்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.
அதேபோல எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. மினிமம் விலையில் 90 நாட்களுக்கு சிம் கார்டு ஆக்டிவாக (SIM Card Active) இருக்க வேண்டுமானால், அன்லிமிடெ் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளுடன் வரும் முதலாவது திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். அதுவே டேட்டாவுடன் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு சலுகைகள் வேண்டுமானால், இந்த திட்டம் சரியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








