இறங்கி அடித்த BSNL.. 80 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 300 எஸ்எம்எஸ்.. மட்ட ரேட்டில் ரீசார்ஜ்!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு அடிமட்ட விலைக்கு 80 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் வாய்ஸ் ஒன்லி திட்டம் (Voice Only Plan) அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) கிடைக்கும் சலுகைகளை இப்போது, தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் கொடுப்பதற்கு முன்பாகவே பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வாய்ஸ் கால்களுக்கு மட்டும் ரீசார்ஜ் செய்யும்படி திட்டங்கள் இருந்திருக்கின்றன. அதிலும், ஆப்ஷன்கள் அதிகமாக பிஎஸ்என்எல்லில் மட்டுமே கிடைக்கிறது. மற்ற நிறுவனங்களில் 2 திட்டங்கள் அல்லது 3 திட்டங்கள் மட்டுமே இருக்கும்.

பிஎஸ்என்எல்லில் அதிக ஆப்ஷன்கள் இருப்பதால், எதை ரீசார்ஜ் செய்வது என்பதில் குழப்பமாக இருக்கலாம். இவர்களில் 2 மாதங்களுக்கு மேல், கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு பெஸ்ட் வாய்ஸ் ஒன்லி திட்டமாக பிஎஸ்என்எல் ரூ.439 ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இதில் 80 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ.439 திட்ட விவரங்கள் (BSNL Rs 439 Plan Details): 2 மாதங்களுக்கு மேல் வேலிடிட்டி கிடைக்கும். அதாவது, 80 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது. இந்த நாட்களில் அனைத்து நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம்.
300 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். இந்த சலுகைகளை மட்டுமே இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது. வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமே போதுமானால், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதேபோல வேலிடிட்டியில் தினசரி டேட்டாவுடன் ரீசார்ஜ் திட்டம் வேண்டுமானால், ரூ.485 விலைக்கு கிடைக்கும் திட்டத்தை பெறலாம்.
இதில் 72 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், தினசரி லிமிட்டில் டேட்டா கிடைக்கும். கூடவே, போஸ்ட் டேட்டாவையும் கொடுக்கும். அதேபோல தினசரிக்கு எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ள முடியும். தினசரி டேட்டா மற்றும் 2 மாதங்களுக்கு மேலான வேலிடிட்டியுடன் மலிவான விலைக்கு கிடைக்கும் திட்டமாக இது இருக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ.485 திட்ட விவரங்கள் (BSNL Rs 485 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 72 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, 2 மாதங்களுக்கு மேல் கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கு வேலிடிட்டி பெற்று கொள்ளலாம். இந்த நாட்களில் தினமும் 2 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். இதற்கு மேல் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.
ஆகவே, 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம். அனைத்து நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ள முடியும். முந்தைய திட்டத்தில் மொத்தமாகவே 300 எஸ்எம்எஸ்கள் மட்டுமே கிடைத்தது.
ஆனால், இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். ஆகவே, டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் தினசரிக்கு கிடைக்கும் திட்டமாக இது இருக்கிறது. வெறும் டேட்டா மட்டும் போதுமானால், ரூ.441 திட்டத்துக்கு கஸ்டமர்கள் செல்லலாம். இது டேட்டா வவுச்சராக மட்டுமே இருக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ.441 திட்ட விவரங்கள் (BSNL Rs 441 Plan Details): இந்த திட்டத்துக்கு 60 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் 100 ஜிபி டேட்டா மொத்தமாக கொடுக்கப்படும். இதை லிமிட் இல்லாமல் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவானது, வேலிடிட்டிக்கு முன்பாக முடிந்தால், 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.


Click it and Unblock the Notifications