Home
News

இதுபோதுமே பிஎஸ்என்எல்.. மாதம் ரூ.146 போதும்.. 90 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 300 எஸ்எம்எஸ்!

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களையே தூக்கிசாப்பிடும் விதமாக பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் மாதத்துக்கு வெறும் ரூ.146 செலவில் 90 நாட்கள் வேலிடிட்டியோடு அசத்தலான சலுகைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் சலுகைள் எப்படி? டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறதா? உள்ளிட்ட முழு விவரம் இதோ.

பிஎஸ்என்எல் நிறுவனம் முதல் கட்ட 4ஜி சேவையை வரும் நவம்பர் மாதத்தில் இருந்து தொடங்க இருக்கிறது. முதலில் பஞ்சாப் பிறகு கேரளா என்று அடுத்தடுத்து சேவைகளை தொடக்குவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனால், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் படு குஷியில் இருக்கின்றனர்.

மாதம் ரூ.146 போதும்.. 90 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்!

இந்த சூழலில் மிகவும் கம்மியான பட்ஜெட்டில் அதிக வேலிடிட்டி மற்றும் பலன்களை கொண்டிருக்கும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை பற்றிய விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். ரூ 439 மற்றும் ரூ 499 விலையில் கிடைக்கும் இந்த திட்டங்களில் என்னென்ன சலுகைகள் உள்ளன என்பதை இப்போது பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ 439 திட்ட விவரங்கள் (BSNL Rs 439 Plan Details): இந்த திட்டத்தில் முழுக்க முழுக்க வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகை மட்டுமே கொடுக்கப்படுகிறது. டேட்டா மற்றும் ஓடிடி சலுகையை எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், மூன்று மாதங்களுக்கு வேலிடிட்டி கிடைப்பதால், நல்ல பலன்களை தரக்கூடியதாகவே இருக்கிறது.

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் (Roaming) வாய்ஸ் கால் சலுகை கொடுக்கப்படும். அதோடு 300 எஸ்எம்எஸ்களை (SMS) செய்து கொள்ள முடியும். இந்த திட்டத்துக்கு 90 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. ஆகவே, வாய்ஸ் கால் சலுகை மட்டுமே தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் நல்ல தேர்வாக இருக்கும்.

மாதம் ரூ.146 போதும்.. 90 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்!

இதே பட்ஜெட்டில் டேட்டா சலுகையும் வேண்டும் என்றால், ரூ.499 விலையில் கிடைக்கும் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகை மட்டுமல்லாமல், 2 ஜிபி டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முழு விவரங்களை இப்போது தெரிந்துகொள்வோம்.

பிஎஸ்என்எல் ரூ 499 திட்ட விவரங்கள் (BSNL Rs 499 Plan Details): இந்த திட்டத்துக்கு 75 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகை கொடுக்கப்படும். இது அனைத்து நெட்வொர்க்குக்கும் பொருந்தக்கூடிய சலுகையாகும்.

அதேபோல நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, 75 நாட்களுக்கு மொத்தமாக 150 ஜிபி டேட்டா வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இந்த 2 ஜிபி டேட்டாவை முழுவதும் பயன்படுத்திவிட்டாலும், உங்களுக்கு 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிலெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் வேலிடிட்டி முடியும் வரையில் தடையில்லா டேட்டா சலுகையை பெற்றுக்கொள்ளலாம்.

மாதம் ரூ.146 போதும்.. 90 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்!

அதுமட்டுமல்லாமல், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். இந்த சலுகைகள் போக பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes) சலுகையும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. இப்படி ஏராளமான சலுகையை இந்த திட்டம் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு திட்டங்களும் மாதத்துக்கு மற்ற டெலிகாம் நிறுவனங்களை ஒப்பிடுகையில் மிகவும் மலிவாகவே இருக்கின்றன.

மேலும், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி சேவையை வரும் நவம்பர் மாதம் முதல் தொடங்க இருக்கிறது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. முதலில் பஞ்சாப் மாநிலத்தில் 4ஜி சேவை தொடங்குகிறது. அதன்பின்பு கேரளாவில் தொடங்குகிறது. நாடு முழுவதும் தொடங்க 18 மாதங்களாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 439 Plan With 90 Days Validity, Unlimited Voice Calls, 300 SMS Check VOICE Vouchers Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X