Home
News

ஏழைக்கு ஏத்த BSNL.. மாசம் ரூ.146-க்கு 90 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. இதுக்குமேல என்ன வேணும்?

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகியவற்றை தூக்கி சாப்பிடும்படியான அடிமட்ட விலைக்கு 90 நாட்கள் திட்டத்தை பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் களமிறக்கி இருக்கிறது. மாதாந்திரம் வெறும் ரூ.146 செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகையை கொடுத்துள்ளது. இதேபோல அடிமட்ட விலைக்கு கிடைக்கும் 3 திட்டங்களை இப்போது பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ 439 திட்ட விவரங்கள் (BSNL Rs 439 Plan Details): இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL Prepaid Plan) 90 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் வாய்ஸ் கால்களுக்கு எந்தவித பஞ்சமும் இருக்காது. அதாவது, 90 நாட்களிலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி (STD) வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம்.

ஏழைக்கு ஏத்த BSNL.. மாசம் ரூ.146-க்கு 90 நாட்கள் வேலிடிட்டி திட்டம்!

இதுபோக நேஷனல் ரோமிங் கால்களையும் (National Roaming Calls) செய்து கொள்ளலாம். அதேபோல 300 எஸ்எம்எஸ் சலுகை மொத்தமாக கொடுக்கப்படுகிறது. இதை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். இந்த வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமே இந்த திட்டத்தில் கிடைக்கிறது. ஆகவே, டேட்டா போன்ற சலுகையை எதிர்பார்க்க முடியாது.

இந்த திட்டத்துக்கு மாதம் ரூ.146 மட்டுமே செலவாகிறது. ஆகவே, அடிமட்ட விலையில் 3 மாதங்களுக்கு சிம் கார்டு ஆக்டிவ் மட்டுமல்லாமல், கூடவே வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகை வேண்டுமானால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். ஒருவேளை தினசரி டேட்டா வேண்டுமானால், 2 ஜிபி டேட்டாவை கொடுக்கும் பின்வரும் திட்டம் இருக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 485 திட்ட விவரங்கள் (BSNL Rs 485 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் போக தினசரி டேட்டாவும் (Daily Data) கிடைக்கிறது. ஆகவே, இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 2 ஜிபி டேட்டா நாளொன்றுக்கு வழங்கப்படுகிறது. இந்த டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டா வருகிறது.

40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை 2 ஜிபி டேட்டா முடிந்த பிறகு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த தினசரி டேட்டாவை போலவே தினசரிக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளை பெற்று கொள்ள முடியும். இந்த சலுகைகள் போக பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகைகளை பயன்படுத்தி கொள்ள முடியும்.

இந்த திட்டத்தில் டேட்டா சலுகை கூடுதலாக கிடைப்பதால், 80 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இதேபோல தினசரி டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் கால்கள் சலுகைகள் மட்டுமல்லாமல், கேமிங் பிரியர்களுக்காக பிரீமியம் சந்தாவும் வேண்டுமானால், பின்வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ 499 திட்ட விவரங்கள் (BSNL Rs 499 Plan Details): இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தில் முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போலவே 2 ஜிபி டேட்டா நாளொன்றுக்கு பயன்படுத்த கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா சலுகையை பயன்படுத்தி கொள்ள முடியும். 100 எஸ்எம்எஸ் சலுகையும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல அன்லிமிடெட் லோக்கல் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்டிடி கால்களை செய்து கொள்ளலாம். மேலும் ரோமிங் வாய்ஸ் கால்களும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இந்த மூன்று சலுகைகள் போக பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes) சலுகைகள் கிடைக்கிறது. கூடுதலாக கேமியம் பிரீமியம் (GAMEIUM Premium) சந்தா கிடைக்கிறது. 75 நாட்கள் வேலிடிட்டி வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 439 Plan With 90 Days Validity Unlimited Voice Calls 300 SMS Check Cheapest 3 Month Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X