Home
News

ஏழைக்கு ஏத்த BSNL.. அடுத்த 80 நாட்களுக்கு வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 300 எஸ்எம்எஸ்!

அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மட்டுமே போதும், கூடவே எஸ்எம்எஸ்கள் இருந்தால் ஓகே, மற்ற எந்த சலுகைகளும் வேண்டாம் என்று கேட்கும் பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்களுக்கு பக்காவாக ஒரு திட்டம் இருக்கிறது. 2 மாதங்களுக்கு மேல் வேலிடிட்டி கொடுக்கும் இந்த திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விடவும் அதிகப்படியான வாய்ஸ் ஒன்லி திட்டங்களை பிஎஸ்என்எல் வைத்து இருக்கிறது. அதேபோல 14 நாட்கள் வேலிடிட்டி முதல் 300 நாட்கள் வேலிடிட்டி வரையில் வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் கிடைக்கின்றன. இதில் நாம் பார்க்க இருக்கும் திட்டம் 80 நாட்கள் வேலிடிட்டியை கொடுக்கிறது.

ஏழைக்கு ஏத்த BSNL.. அடுத்த 80 நாட்களுக்கு வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்!

பிஎஸ்என்எல் ரூ.439 திட்ட விவரங்கள் (BSNL Rs 439 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை எளிதாக சொல்லி முடித்துவிடலாம். ஏனென்றால், வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் வேலிடிட்டி இந்த மூன்று சலுகைகள் மட்டுமே கிடைக்கும். ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 80 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்படும். மேலும், 300 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம். இந்த சலுகைகளை தவிர வேறு சலுகைகள் கிடைக்காது. டேட்டா வேண்டுமானால், டேட்டா வவுச்சர்களை பெற்று கொள்ளலாம்.

இதேபோல வாய்ஸ் கால்களை ஒரு மாதத்துக்கு பெற விரும்பினால், 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் பிஎஸ்என்எல் ரூ.202 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்காது. நிமிடங்களுக்கு கணக்கு செய்யப்படும். ஆனால், கூடுதலாக டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ.202 திட்ட விவரங்கள் (BSNL Rs 202 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 28 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்கள் முழுவதுக்கும் 300 நிமிடங்களுக்கு லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். 5 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. இந்த 5 ஜிபிக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.

100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படுகின்றன. இதுபோக இன்சூரன்ஸ் சலுகைகளையும் இந்த திட்டம் கொடுக்கிறது. இதைவிட மலிவான விலைக்கு ப்ரீபெய்ட் திட்டம் வேண்டுமனால், ரூ.147 விலைக்கு கிடைக்கும் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் வாய்ஸ் கால்களுக்கு லிமிட் கிடையாது. ஆனால், முந்தைய திட்டத்தை போல டேட்டா சலுகைகள் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.147 திட்ட விவரங்கள் (BSNL Rs 147 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 24 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை கொடுக்கிறது. இதில் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படவில்லை. இருப்பினும், 5 ஜிபி டேட்டா கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். இந்த விலைக்கு மற்ற நிறுவனங்களில் வாய்ஸ் ஒன்லி திட்டம் கிடைக்காது. ரூ.150 விலைக்கு மேல் மட்டுமே திட்டங்கள் ஆரம்பமாகும். இதில் கஸ்டமர்களின் தேவைக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். டேட்டா தேவைப்படாத கஸ்டமர்களுக்கு மட்டுமே இவை பொருந்தும்.

Best Mobiles in India

English summary
BSNL Rs 439 Plan With 80 Days Validity Unlimited Voice Calls 300SMS Check Voice Only Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X