மக்களுக்காக BSNL.. மக்களுக்காகவே BSNL என நிரூபிச்சுடீங்க.. இனி காஸ்ட்லீ பிளான் தேவையில்லை.. புதுமை ரீசார்ஜ்..
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) தொலைத்தொடர்பு நிறுவனம் TRAI இன் அறிவுறுத்தலை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொண்டு, அடுத்த அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே இந்தியாவில் புதுமையான பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை (BSNL prepaid recharge plan) அறிமுகம் செய்துள்ளது. முதல் முறையாக டேட்டா நன்மை இல்லாத, வெறும் வாய்ஸ் கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் நன்மையை வழங்கும் 90 நாள் திட்டத்தை பிஎஸ்என்எல் (90 days plan) அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் விலை மற்றும் இதன் நன்மைகள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
இந்தியாவின் நம்பகமான தொலைத்தொடர்பு நிறுவனமாக கருதப்படும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் மீண்டும் தலைப்பு செய்தியை எட்டியுள்ளது. நீண்ட காலமாக மொபைல் பயனர்கள், எதிர்பார்த்து காத்திருந்த அந்தவொரு தனித்துவமான ப்ரீபெய்ட் பிளானை பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் முதல் வாய்ஸ் காலிங் திட்டத்தை டேட்டா நன்மையின்றி அறிமுகம் செய்துள்ளது. மக்கள் கேட்டதை வழங்கி, உண்மையான மக்கள் நெட்வொர்க் என்பதை BSNL இந்த புதுமை திட்டத்துடன் நிரூபித்துள்ளது.

மக்களுக்காக BSNL.. மக்களுக்காகவே BSNL என நிரூபிச்சுடீங்க:
இந்த திட்டம் டேட்டா நன்மை இல்லாமல், அதன் பயனர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) நன்மையை மட்டும் வழங்குகிறது. TRAI-ன் சமீபத்திய உத்தரவை தொடர்ந்து, இந்த வாய்ஸ் காலிங் திட்டம் (BSNL new voice calling plan) தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பல கோடி பயனர்களுக்கு டேட்டா நன்மை தேவைப்படாமல் இருக்கிறது. இருப்பினும், டெலிகாம் (telecom) நிறுவனங்கள் டேட்டா நன்மையை பயனர்கள் மீது திணிப்பதாக கூறப்பட்டது.
டேட்டா நன்மை தேவைப்படாத மக்களுக்கு, டெலிகாம் நிறுவனங்கள் வாய்ஸ் காலிங் திட்டங்களை டேட்டா நன்மை இல்லாமல் டெலிகாம் நிறுவனங்கள் வழங்க வேண்டுமென்று TRAI உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து, BSNL நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு முதல் வாய்ஸ் காலிங் திட்டத்தை ரூ. 450 விலைக்குள் (BSNL's first voice calling prepaid plan without data benefit) அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் மக்கள் தனியாக டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் (BSNL data vouchers) செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் ரூ. 439 திட்டம் (BSNL Rs 439 Plan):
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள பிஎஸ்என்எல் ரூ. 439 திட்டம் (BSNL Rs 439 Plan) திட்டத்தின் நன்மைகளை பற்றி பார்க்கலாம். இந்த திட்டம் அணைத்து நெட்வொர்க்கிற்குமான லோக்கல் (local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் (Roaming) நன்மையை அன்லிமிடெட் ஆக வழங்குகிறது. ஆம், இதுவொரு அன்லிமிடெட் வாய்ஸ் கால் (unlimited voice calls) திட்டமாகும்.
அதிக செலவில்லாமல் பயனர்களை நீண்ட காலத்திற்கு இணைப்புடன் இணைந்திருக்க இந்த திட்டம் உதவுகிறது. இந்த திட்டம் டேட்டா நன்மை தேவைப்படாத வடிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட திட்டமாகும். இந்த திட்டம் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி (BSNL 90 days validity plan) உடன் வருகிறது. இத்துடன் இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மையையும் வாடிக்கையாளர்கள் அனுபவித்துக்கொள்ள முடியும்.
இனி காஸ்ட்லீ பிளான் தேவையில்லை:
உங்களிடம் இருக்கும் BSNL சிம் கார்டை (BSNL SIM card) இனி நீங்கள் அதிக கட்டணம் செலுத்தி ஆக்டிவ் நிலையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இனி பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இந்த புதிய வாய்ஸ் காலிங் திட்டத்தை ரீசார்ஜ் செய்து, 90 நாட்களுக்கு தடையில்லாத சேவையை அனுபவிக்க முடியும் என்று BSNL தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








