Home
News

BSNL ஆட்டமே தனி.. மாதாந்திரம் ரூ.146 போதும்.. 90 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்!

எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் கொடுக்க முடியாத வகையில், மாதத்துக்கு வெறும் ரூ.146 செலவில் 90 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகளை பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் வழங்குகிறது. இதேபோல மூன்று திட்டங்களை வைத்திருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

பிஎஸ்என்எல் ரூ 439 திட்ட விவரங்கள் (BSNL Rs 439 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் முழுக்க முழுக்க வாய்ஸ் கால் சலுகைக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு வாய்ஸ் கால் சலுகை மட்டுமே இருந்தால் போதும், டேட்டா சலுகையெல்லாம் வேண்டாம் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் மிகவும் லாபம் தரக்கூடியதாகும்.

மாதாந்திரம் ரூ.146 போதும்.. 90 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்!

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 90 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இது சிம் ஆக்டிவ் திட்டமாகும். ஆகவே, வேறு திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டியது கிடையாது. இந்த 90 நாட்களில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி (Unlimited Local, STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல், மொத்தமாக 300 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கான மாதாந்திர செலவானது, வெறும் ரூ.146 மட்டுமேயாகும். இந்த விலைக்கே 90 நாட்களுக்கு சர்வீஸ் வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ் சலுகை கிடைக்கிறது. இதேபோல திட்டத்தில் தினசரி டேட்டா சலுகை வேண்டுமானால், ரூ 485 மதிப்பிலான திட்டத்தை தேர்ந்தெடுங்கள்.

பிஎஸ்என்எல் ரூ 485 திட்ட விவரங்கள் (BSNL Rs 485 Plan Details): இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL Prepaid) வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் சலுகை மட்டுமல்லாமல், தினசரி டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கொடுகக்ப்படுகிறது.

இந்த வேலிடிட்டியில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா சலுகையை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, மொத்தமாக 123 ஜிபி டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். அதேபோல 1.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) சலுகை கிடைக்கிறது.

அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். இதுபோக தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். மீடியம் யூசேஜ் டேட்டா சலுகை தேவைப்படும் பிஎஸ்என்எஸ் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் நல்ல தேர்வாக இருக்கும். இதைவிட அதிகமாக டேட்டா தேவைப்பட்டால், ரூ 599 விலை கொண்ட திட்டம் இருக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 599 திட்ட விவரங்கள் (BSNL Rs 599 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 3 ஜிபி டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல் கூடுதலாக பல்வேறு சலுகைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

ஆகவே, வேலிடிட்டி நாட்களில் மொத்தமாக 252 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். முந்தைய திட்டத்தைப் போலவே 3 ஜிபிக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கிடைக்கிறது. அதே போல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையை இந்த திட்டத்திலும் பெற்று கொள்ளலாம்.

இதுபோக அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகைகளும் இந்த பிஎஸ்என்எஸ் திட்டத்தில் கிடைக்கிறது. மேலும், ஜிங்க் (Zing) ஆப், பிஆர்பிடி (PRBT), அஸ்ட்ரோசெல் (Astrocell) மற்றும் கேம்ஆன் சர்வீஸ் (GameOn Services) சலுகைகளையும் இந்த திட்டத்தில் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கான மாதாந்திர செலவானது, வெறும் ரூ 199ஆக மட்டுமே இருக்கிறது. ஆகவே, 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் போன்ற அதிகப்படியான சலுகைகள் கொண்ட திட்டம் கம்மியான விலையில் வேண்டுமானால், இந்த திட்டத்தை பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் தேர்ந்தெடுக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 439 Plan Offers 90 Days Validity, Unlimited Voice Calls Check 3 Month Recharge Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X