ஏழைக்கு ஏத்த பிஎஸ்என்எல்.. மாதாந்திரம் ரூ.146-க்கு 90 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 300 எஸ்எம்எஸ்!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, அடிமட்ட விலைக்கு ரீசார்ஜ் திட்டங்களை விரும்பும் கஸ்டமர்களுக்கு ஏற்றதாக இருப்பதை மறுக்க முடியாது. ஏனென்றால், ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்களில் கிடைக்கும் திட்டங்களின் விலையை விட பிஎஸ்என்எல்லில் குறைவாக கிடைக்கிறது. இப்போது, பார்க்க இருக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தில் மாதத்துக்கு ரூ.146 செலவில் 90 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது.
தனியார் டெலிகாம் நிறுவனங்கள் மலிவு விலைக்கு கிடைக்கும் திட்டங்களை நீக்க தொடங்கி இருக்கின்றன. ஆனால், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் பல்வேறு மாநிலங்களில் 4ஜி சேவையை தொடங்கிய பிறகும் கூட அடிமட்ட விலைக்கே ப்ரீபெய்ட் திட்டங்களை (Prepaid Plan) கொடுத்து வருகிறது. இதில் வாய்ஸ் ஒன்லி திட்டங்களும் இருக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 439 திட்டத்தில் 90 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 30 நாட்களுக்கு ரூ.146 மட்டுமே தேவைப்படுகிறது. இந்த விலைக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) கிடைப்பதால், கஸ்டமர்களுக்கு அடிமட்ட விலை திட்டமாகவே இருக்கிறது. இதில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்? எது கிடைக்காது.
பிஎஸ்என்எல் ரூ 439 திட்டம் (BSNL Rs 439 Plan): இதுவொரு வாய்ஸ் ஒன்லி (Voice Only) திட்டமாக இருக்கிறது. ஆகவே, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய 2 சலுகைகள் மட்டுமே கிடைக்கிறது. அதேபோல எஸ்எம்எஸ் சலுகைகள் தினசரிக்கு கிடைக்காது. லம்ப்-சம் முறையில் மட்டுமே கொடுக்கப்படும். மேலும், இதில் டேட்டாவை துளியும் எதிர்பார்க்க முடியாது.
ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 90 நாட்கள் முழுவதுக்கும் 300 எஸ்எம்எஸ்கள் மட்டுமே கொடுக்கப்படும். ஆனால், வாய்ஸ் கால்களை பொறுத்தவரையில், வழக்கம்போலவே அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையாக கொடுக்கப்படுகிறது.
இந்த சலுகைகள் மட்டுமே கிடைக்கிறது. இதேபோல ரூ.500 பட்ஜெட்டுக்குள் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இதில் தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கும். ஆனால், 90 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்காது. 10 நாட்கள் குறைவாக 80 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்படும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் சலுகைகளை பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ 485 திட்டம் (BSNL Rs 485 Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளும் கிடைக்கிறது. ஆனால், இந்த சலுகைகளை 80 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம். 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் கிடைக்கிறது.
80 நாட்களுக்கு 160 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போலல்லாமல், இதில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் அனுப்ப கிடைக்கிறது. வாய்ஸ் கால்களில் எந்த மாற்றமும் கிடையாது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகைகள் கிடைக்கிறது. இந்த திட்டங்களில் வாய்ஸ் கால்கள் பொதுவாக இருக்கிறது.
டேட்டா சலுகையில் அடிப்படையில் விலை மற்றும் வேலிடிட்டி மாறுபடுகிறது. இதில் உங்களது தேவைக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இதேபோல பல்வேறு திட்டங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் கொடுக்கிறது. வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் பிளான் வவுச்சர்கள் என்று தனித்தனியே திட்டங்களை கொடுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications








