BSNL சிம் குடுங்கப்பா.. மாதாந்திரம் ரூ.137 போதும்.. 90 நாட்கள் வேலிடிட்டி.. 2 ஜிபி டேட்டா.. அதும் தினமும்!
மத்திய தொலைத்தொடர்பு துறையின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் கொடுக்கும் திட்டங்களை பார்த்தால், சிம் கார்டு குடுங்கப்பா முதல்ல என்று சொல்லிவிடலாம் போல.. அப்படியான ப்ரீபெய்ட் திட்டங்களை (Prepaid Plan) வைத்திருக்கிறது. அதிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா என்று தனித்தனியாக சலுகைகளை கொடுக்கும்படியும் திட்டங்கள் இருக்கின்றன. இப்போது பார்க்கப்போகும் திட்டங்களும் அப்படித்தான் கிடைக்கின்றன. மாதத்துக்கு வெறும் ரூ.137 செலவில் 90 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. இந்த திட்டத்தின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ 411 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 411 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டம் டேட்டாவுக்கு மட்டுமே பிரத்யேமாக கிடைக்கிறது. ஆகவே, தினசரி டேட்டா மற்றும் ஃபேர் யூசேஜ் டேட்டா சலுகைகளை தவிர மற்ற சலுகைகள் கிடைக்காது. வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்களுக்கு தனியாக திட்டங்கள் தேவைப்படும். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது.

இந்த 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை (Post Data) பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 160 ஜிபி டேட்டா மற்றும் போஸ்ட் டேட்டாவை பெற்று கொள்ளலாம். இதற்கான மாத செலவை கணக்கிட்டால் வெறும் ரூ.137ஆக மட்டுமே இருக்கிறது. இதேபோல வருடாந்திர திட்டம் உள்ளது.
பிஎஸ்என்எல் ரூ 1515 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 1515 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டமும் டேட்டா சலுகைகளை மட்டுமே கொடுக்கிறது. ஆகவே, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை பெற்று கொள்ள முடியாது. ஆனால், வருடம் முழுவதும் டேட்டா சலுகை கொடுக்கப்படும். அதாவது, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.
மேலும், முந்தைய திட்டத்தை போலவே 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. 365 நாட்கள் வேலிடிட்டி கொடுப்பதால், மொத்தமாக 730 ஜிபி டேட்டா மற்றும் போஸ்ட் டேட்டாவை பெறலாம். இந்த வருடாந்திர திட்டத்துக்கு மாத செலவை பார்த்தால் வெறும் ரூ.126 ஆக மட்டுமே இருக்கிறது. இது டேட்டாவுக்கான திட்டம் என்றால், இதேபோல வாய்ஸ் கால்கள் மட்டும் கொண்ட திட்டம் இருக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ 439 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 439 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டம் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகையை மட்டுமே கொடுக்கிறது. ஆகவே, டேட்டா சலுகைகளை எதிர்பார்க்க முடியாது. ஆனால், வேலிடிட்டி பட்டையை கிளப்புகிறது. இந்த வாய்ஸ் ஒன்லி திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 90 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது.
இந்த எஸ்எம்எஸ் சலுகைகள் போல அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. மூன்று மாதங்களுக்கு பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு குறையில்லாத வாய்ஸ் கால்கள் கிடைக்கின்றன. இதேபோல பல்வேறு திட்டங்களை பிஎஸ்என்எல் கொடுக்கிறது. அனைத்தும் மலிவான விலைக்கு கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








