Home
News

ஆட்டம் போடும் பிஎஸ்என்எல்.. மட்ட விலையில் 4G சேவை.. மாதம் ரூ.126 போதும்.. 2GB டேட்டா.. 365 நாட்கள் வேலிடிட்டி!

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்களை விட மலிவான விலையில் 90 நாட்கள், 180 நாட்கள், 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 4ஜி டேட்டா திட்டங்களை பிஎஸ்என்எல் (BSNL 4G Data Plans) நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

பிஎஸ்என்எல் நிறுவனம் அடுத்த ஆண்டில் 4ஜி சேவையை வழங்க இருக்கிறது. இதற்கான பணிகள் அசூர வேகத்தில் நடந்து வருகின்றன. நாட்டின் பெரும்பாலான மாவட்டங்கள் 2ஜி டவர்கள் 4ஜி டவர்களாக மாற்றும் பணியும், புதிய 4ஜி மற்றும் 5ஜி டவர்களை அமைக்கும் பணிகளும் பல மாதங்களாகவே நடந்து வருகின்றன.

BSNL 4G சேவை.. மாதம் ரூ.126 போதும்.. 2GB டேட்டா.. ஒரு வருட வேலிடிட்டி!

கேரளா, பஞ்சாப் மாநிலங்களில் கிட்டத்தட்ட பணிகள் முடியும் தருவாயில் இருப்பதால், மற்ற மாநிலங்களைவிட அங்கு விரைவில் 4ஜி சேவை தொடங்கப்படுகிறது. இதனால், 4ஜி சேவைக்கான திட்டங்களின் மீது கஸ்டமர்களின் கவனம் சென்றுள்ளது. இந்த சூழலில் மற்ற நிறுவனங்களைவிட மலிவான விலையில் டேட்டா திட்டங்களை பிஎஸ்என்எல் கொண்டுவந்துள்ளது.

பிஎஸ்என்எல் ரூ 411 திட்ட விவரங்கள் (BSNL Rs 411 Plan Details): இந்த திட்டத்தில் முழுவதும் டேட்டா சலுகை மட்டுமே வழங்கப்படுகிறது. வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் சலுகைகள் கிடைக்காது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 180 ஜிபி டேட்டா ஒதுக்கப்படும்.

இந்த 2 ஜிபி டேட்டாவை முழுவம் பயன்படுத்தி விட்டாலும், ஃபேர் யூசேஜ் பாலிசியின் (Fair Usage Policy) கீழ் 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சேவை வழங்கப்படும். இந்த டேட்டா திட்டத்தின் சலுகைகளை பெற வேண்டுமானல், உங்களிடம் பேஸ் வேலிடிட்டி ப்ரீபெய்ட் திட்டம் (Base Validity Prepaid Plan) ஆக்டிவாக இருக்க வேண்டும்.

பிஎஸ்என்எல் ரூ 788 திட்ட விவரங்கள் (BSNL Rs 788 Plan Details): இந்த திட்டத்துக்கும் பேஸ் வேலிடிட்டி ப்ரீபெய்ட் திட்டம் ஆக்டிவாக இருக்க வேண்டும். அதேபோல டேட்டாவை தவிர வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படாது. இருப்பினும், அதிகப்படியான டேட்டா சலுகைகளை இந்த திட்டம் கொண்டிருக்கிறது.

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு 180 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும். அதாவது, தொடர்ந்து 6 மாதங்களுக்கு நாள்தோறும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படும். ஆகவே, உங்களுக்கு மொத்தமாக 360 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இதில் தினசரி ஒதுக்கப்பட்ட 2 ஜிபி டேட்டாவை முழுவதும் பயன்படுத்திவிட்டால், 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம்.

பிஎஸ்என்எல் ரூ 1515 திட்ட விவரங்கள் (BSNL Rs 1515 Plan Details): இந்த திட்டம் மட்டுமே அதிகப்படியான டேட்டா சலுகையையும், வேலிடிட்டியையும் கொண்டிருக்கிறது. இந்த திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், ஒரு வருடத்துக்கு எந்த டேட்டா திட்டங்களும் உங்களுக்கு தேவைப்படாது.

இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 730 ஜிபி டேட்டா வழங்கப்படும். இந்த 2 ஜிபி தினசரி டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சேவை கிடைக்கும். இந்த திட்டத்துக்கும் இந்த திட்டத்துக்கும் பேஸ் வேலிடிட்டி ப்ரீபெய்ட் திட்டம் ஆக்டிவாக இருக்கு வேண்டியது அவசியமாகும். இந்த திட்டம் மாதத்துக்கு ரூ.126 மட்டுமே செலவை கொண்டுள்ளது.

இந்த மூன்று திட்டங்களும் மற்ற டெலிகாம் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் மிகுந்த சலுகைகளை வழங்குகின்றன. பிஎஸ்என்எல் 4ஜி சேவைக்கு பின்பு, அதன் டேட்டா வேகத்தை பொறுத்தே இவற்றின் வரவேற்பு இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. நீண்ட ஆண்டுகளுக்கு பின்பு 4ஜி சேவை வழங்கப்படுவதால், பிஎஸ்என்எல் நிறுவனம் மலிவான விலையிலேயே திட்டங்களை வழங்கும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 411 Plan Offer 90 Days Validity 2GB Daily Data 40 Kbps FUP Limit 4G Data Vouchers Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X