கேபிள் TV கதையை முடிச்சு விட்ட BSNL.. 400 சேனல், 9 ஓடிடி, ஹைஸ்பீட் இண்டர்நெட், அன்லிமிடெட் வாய்ஸ்.. என்ன விலை?
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் ஒரு முடிவோடுதான் இருக்கிறது போல. 2025 ஆம் ஆண்டு சுதந்திர தினம் முடிந்து 1 வாரம் ஆகியும் கூட, இன்னமும் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் சுதந்திர தின சலுகைகளை (Independence Day Offers) அறிவிப்பதை நிறுத்திய பாடில்லை!
முதலில் - வெறும் ரூ.1 க்கு 30 நாட்கள் செல்லுபடியாகும் 4ஜி பிளானை அறிமுகம் செய்திருந்தது. அதனை தொடர்ந்து - அதன் 1 ஜிபிபிஎஸ் ஸ்பீட் திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்களுக்கு, மாதந்தோறும் ரூ.1000 என மொத்தம் 6 மாதங்களுக்கு ரூ.6,000 தள்ளுபடிகிடைக்கும் என்று அறிவித்து இருந்தது.

இப்போது - பிஎஸ்என்எல் நிறுவனம் தனது மலிவு விலையிலான டிரிபிள் ப்ளே திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் விலை மாதத்திற்கு ரூ.400 ஆகும் (வரிகள் சேர்த்து). இந்த டிரிபிள் ப்ளே திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இந்த திட்டம் எங்கெல்லாம் கிடைக்கிறது? ரீசார்ஜ் செய்வது எப்படி? இதோ விவரங்கள்:
என்னென்ன நன்மைகள்? ரூ.400 மதிப்புள்ள டிரிபிள் ப்ளே திட்டமானது அதிவேக இண்டர்நெட், 400 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களுக்கான அணுகல் (ஈடிவி, எம்ஏஏ டிவி, ஜெமினி டிவி மற்றும் ஜீ டிவி உட்பட), ஒன்பது ஓடிடி ஆப்கள் மற்றும் நாடு தழுவிய அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.
எங்கெல்லாம் கிடைக்கிறது? தற்போதைக்கு ரூ.400 மதிப்புள்ள பிஎஸ்என்எல்-ன் டிரிபிள் ப்ளே திட்டமானது ஆந்திர பிரதேச வட்டத்தில் உள்ள அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இது மற்ற வட்டங்களில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
பெறுவது எப்படி? ரூ.400 டிரிபிள் ப்ளே திட்டத்தின் மீது ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் வழியாக 1800 4444 என்கிற எண்ணுக்கு "ஹாய்" (Hi) என்று மெசேஜ் அனுப்பவும் அல்லது பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகவும் அல்லது bookmyfiber.bsnl.co.in வலைத்தளம் வழியாக ஆன்லைனில் முன்பதிவு செய்யவும். ஏற்கனவே பிஎஸ்என்எல் எப்டிடிஎச்சேவையின் கீழ் உள்ள பயனர்கள் மாதத்திற்கு ரூ.140 க்கு டிவி சேவைகளை சேர்க்கலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் 1 ஜிபிபிஎஸ் பிளான் மீது கிடைக்கும் ரூ.6000 தள்ளுபடி குறித்த விவரங்கள்: பிஎஸ்என்எல்-ன் 1 ஜிபிபிஎஸ் பிளான் ஆனது ஃபைபர் ரூபி ஓடிடி (Fiber Ruby OTT) பிளான் என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வழக்கமான செலவு ரூ.4,799 ஆகும். ஆனால் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை கிடைக்கும் சலுகை காலத்தின் கீழ், பயனர்கள் இந்த திட்டத்தை முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 தள்ளுபடியுடன் பெறலாம்.
அதாவது இந்த திட்டம் முதல் ஆறு மாதங்களுக்கு ரூ.4,799 க்கு பதிலாக ரூ.1000 தள்ளுபடியை பெற்று ரூ.3,799 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். இப்படியாக உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 தள்ளுபடி என மொத்தம் 6 மாதங்களுக்கு ரூ.6000 தள்ளுபடி கிடைக்கும். இந்த தள்ளுபடி நாட்டில் உள்ள எல்லா வட்டங்களிலும் கிடைக்காமல் போகலாம் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
பிஎஸ்என்எல்-ன் ரூ.1 ஆசாதி கா பிளான் (Azadi Ka Plan) விவரங்கள்: ரூ.1 என்கிற விலையின் கீழ் கிடைக்கும் இந்த திட்டம், தினமும் 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை வழங்குகிறது. இது அனைத்தும் 30 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் உங்களுக்கு இலவச பிஎஸ்என்எல் சிம் கார்டும் கிடைக்கும். இந்த சலுகை 2025 ஆகஸ்ட் 30 வரை மட்டுமே கிடைக்கும்.


Click it and Unblock the Notifications