இறங்கி அடித்த BSNL.. 1 ரூபாய்-க்கு 1GB.. ரூ.400-க்கு 400GB டேட்டா.. 40 நாட்கள் வேலிடிட்டி.. யூசர்கள் குஷி!
பிஎஸ்என்எல் (BSNL) ஆனது, அந்த நிறுவனத்தின் கஸ்டமர்கள் மட்டுமல்லாமல், ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற மற்ற டெலிகாம் நிறுவனங்களின் கஸ்டமர்களும் மூக்கில் விரல் வைக்கும்படியான டேட்டா திட்டத்தை (Data Plan) களமிறக்கி இருக்கிறது. ரூ.400 விலைக்கு 400 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. ஆகவே, 1 ரூபாய்-க்கு 1 ஜிபி டேட்டா வீதம் கிடைக்கிறது. இதேபோல 336 நாட்கள் முழுவதும் வேலிடிட்டி கொடுக்கும்படியான டேட்டா திட்டமும் கிடைக்கிறது. இந்த டேட்டா திட்டங்களின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ 400 திட்ட விவரங்கள் (BSNL Rs 400 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு டேட்டா சலுகை மட்டுமே கிடைக்கும். ஆகவே, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை எதிர்பார்க்க முடியாது. இந்த டேட்டா திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு மொத்தமாக 400 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இது லம்ப்-சம் சலுகையாக இருப்பதால், தினசரிக்கு லிமிட் கிடையாது.

எப்போது வேண்டுமானாலும், எவ்வளவு டேட்டாவை வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், இந்த திட்டத்துக்கு கொடுக்கப்படும் 40 நாட்கள் வேலிடிட்டிக்கு முன்பாகவே அந்த 400 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி முடித்துவிட்டால், அதற்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் மட்டுமே டேட்டா கிடைக்கும். இப்போது, அடுத்த டேட்டா திட்டங்களை தெரிந்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ 58 டேட்டா திட்டம் (BSNL Rs 58 Data Plan): பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஆரம்ப விலைக்கு கிடைக்கும் டேட்டா திட்டமாக இது இருக்கிறது. இதில் 7 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். இந்த 7 நாட்கள் முழுவதும் தினசரிக்கு 2 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இந்த தினசரி லிமிட்டுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை (Post Data) பயன்படுத்தி கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ 198 டேட்டா திட்டம் (BSNL Rs 198 Data Plan): இந்த டேட்டா திட்டத்துக்கு 40 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த திட்டமும் தினசரி டேட்டாவை மட்டுமே கொடுக்கிறது. ஆகவே, முந்தைய திட்டத்தை போலவே நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அதற்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை பெற்று கொள்ளலாம். இதற்கு அடுத்து அதிக வேலிடிட்டி கொண்ட டேட்டா திட்டங்கள் கிடைக்கின்றன.

பிஎஸ்என்எல் ரூ 411 டேட்டா திட்டம் (BSNL Rs 411 Data Plan): இந்த டேட்டா திட்டத்துக்கு 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இது முதலில் பார்த்த திட்டத்தைவிட ரூ.11 விலை அதிகமாக இருந்தாலும், அதிக வேலிடிட்டி கொடுக்கிறது. ஆனால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மட்டுமே கிடைப்பதால், 180 ஜிபி டேட்டாவை மட்டுமே பயன்படுத்த முடியும். இதற்கும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ 1515 டேட்டா திட்டம் (BSNL Rs 1515 Data Plan): பிஎஸ்என்எல் நிறுவனத்தின் திட்டங்களிலேயே அதிக வேலிடிட்டி கொண்ட டேட்டா திட்டமாக இது இருக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த கஸ்டமர்களுக்கு 365 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் 730 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. லிமிட்டுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா வருகிறது.


Click it and Unblock the Notifications