Home
News

BSNL ரூ. 399 பிளான் vs ஏர்டெல், ஜியோ, Vi திட்டங்கள்.. 84 நாட்களுக்கு இது தான் பெஸ்ட் திட்டங்கள்..

அரசாங்கத்திற்குச் சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) கவர்ச்சிகரமான பலன்கள், அழைப்பு நிமிடங்கள் மற்றும் செல்லுபடியாகும் பல ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுள்ளது. டேட்டா வேகத்தை விட நீண்ட கால செல்லுபடியாகும் மற்றும் இலவச அழைப்புகளை எதிர்பார்க்கும் சந்தாதாரர்களை இலக்காகக் கொண்ட ஒரு பிரபலமான திட்டம் என்றால் அது ரூ. 399 ப்ரீபெய்ட் திட்டமாகும். இதே விலையில் மற்ற இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா என்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம்.

BSNL வழங்கும் ரூ. 399 திட்டத்தின் நன்மைகள் என்ன?

BSNL வழங்கும் ரூ. 399 திட்டத்தின் நன்மைகள் என்ன?

சரி, இப்போது BSNL வழங்கும் இந்த ரூ. 399 திட்டம் என்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம். இந்த திட்டம் 80 நாட்கள் வரை செல்லுபடியாகும். நன்மைகளைப் பொறுத்தவரை, இந்தத் திட்டம் வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 1GB தினசரி டேட்டா என்ற நன்மையை வழங்குகிறது. தினசரி டேட்டா வரம்பிற்குப் பிறகு 80Kbps வேகத்தில் வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. பயனர் BSNL இன் ஃபிளாக்ஷிப் ட்யூன்கள் மற்றும் லோக்துன் உள்ளடக்கத்தையும் பெறலாம். BSNL அதன் 4G நெட்வொர்க்குகளை வரும் 2022 ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகப்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல்லின் 84 நாட்கள் செல்லுபடியாகும் பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்கள்

ஏர்டெல்லின் 84 நாட்கள் செல்லுபடியாகும் பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்கள்

BSNL இன் திட்டத்தைப் போல, இந்தியாவின் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இதே போன்ற பல திட்டங்களைத் தனது பட்டியலில் வைத்துள்ளது. இருப்பினும் இவற்றின் விலை சமீபத்தில் அதிகரிக்கப்பட்டதால் இதன் விலையில் இப்போது குறுகிய மாற்றங்களுடன் வருகிறது என்பதை மறக்க வேண்டாம். சரி, இப்போது முதலில் Airtel தனது பயனர்களுக்கு 84 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் என்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம். இது BSNL வழங்கும் நன்மையுடன் ஒத்துப்போகிறதா அல்லது குறைவாக இருக்கிறதா என்று ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

ஏர்டெல்லின் ரூ. 455 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல்லின் ரூ. 455 ப்ரீபெய்ட் திட்டம்

நமது பட்டியலில் முதலில் உள்ள திட்டம் என்பது ஏர்டெல்லின் ரூ. 455 விலை கொண்ட திட்டம் தான். இந்த திட்டம் தினசரி டேட்டா நன்மையை வழங்கவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், இதன் மொத்த டேட்டா வரம்பு 6GB ஆகும். இத்துடன் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 900 SMS கிடைக்கிறது. கூடுதலாக, சந்தாதாரர் அமேசான் பிரைம் மொபைல் சந்தாவின் 30 நாள் இலவச சோதனை தவிர ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டின் பலன்களையும் பெறலாம். ஏர்டெலிடம் இன்னும் சில திட்டங்களும் 84 வேலிடிட்டி உடன் வருகிறது.

ஏர்டெல்லின் ரூ.719 மற்றும் ரூ. 839 திட்டம்

ஏர்டெல்லின் ரூ.719 மற்றும் ரூ. 839 திட்டம்

இதேபோல், ஏர்டெல் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கும் மற்றொரு திட்டம் ரூ.719 திட்டமாகும். இந்த திட்டமானது அதன் பயனருக்குத் தினமும் 1.5 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன் ஏர்டெல் கூடுதல் நன்மைகள் கிடைக்கிறது. அடுத்தபடியாக ரூ. 839 திட்டம் உங்களுக்குத் தினமும் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இத்துடன், ஏர்டெல் நிறுவனம் வழங்கும் கூடுதல் நன்மைகள் கிடைக்கிறது. ஏர்டெல் பயனர்கள் அனைவருக்கும் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகள் கூடுதலாக இலவசமாகக் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல்லின் ரூ. 359 திட்டம் BSNL வழங்கும் நன்மையை வழங்குகிறதா?

ஏர்டெல்லின் ரூ. 359 திட்டம் BSNL வழங்கும் நன்மையை வழங்குகிறதா?

BSNL வழங்கும் ரூ. 399 திட்டத்திற்கு இணையான விலை வரம்பில் இந்த திட்டங்கள் எதுவுமே பொருந்தவில்லை என்பது வேதனை. BSNL வழங்கும் விலைக்கு அருகிலுள்ள விருப்பமாக ஏர்டெலிடம் இருக்கும் திட்டம் என்றால் அது ரூ. 359 திட்டம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இது BSNL போல் 84 நாள் வேலிடிட்டி உடன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் தினமும் 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. இருப்பினும், இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் குறைக்கப்பட்ட வேலிடிட்டியுடன் வருகிறது.

Vi வழங்கும் 84 நாட்கள் செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டங்கள்

Vi வழங்கும் 84 நாட்கள் செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டங்கள்

வோடபோன் ஐடியாவும் , ஏர்டெல்லின் ரூ. 359 போன்ற அதே திட்டத்தை 28 நாட்கள் வேலிடிட்டிக்கு வழங்குகிறது. Vi இன் ப்ரீபெய்ட் திட்டமான ரூ. 399 விலையில், ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 குறுஞ்செய்திகள் என அனைத்தும் 42 நாட்களுக்கு வழங்குகிறது. Vi இன் ஃபிளாக்ஷிப் Binge ஆல் நைட் ஆஃபர் 12 முதல் 6 வரை இலவச டேட்டா நன்மை இந்த திட்டத்திற்குப் பொருந்தும். இந்த திட்டம் வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர் நன்மையுடனும் வருகிறது.

வோடபோன் ஐடியா வழங்கும் கூடுதல் நன்மை

வோடபோன் ஐடியா வழங்கும் கூடுதல் நன்மை

இத்துடன் உங்களுக்குக் கூடுதல் நன்மையாக Vi மூவிஸ் மற்றும் டிவிக்கான அணுகல் மற்றும் கூடுதல் செலவின்றி மொத்தமாக இலவசமாக 2 GB கூடுதல் டேட்டாவையும் நிறுவனம் உங்களுக்கு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. Vi இல் 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்கள் என்றால் அவற்றின் விலை ரூ. 901 என்ற ஸ்கேலை தொட்டுவிடுகிறது. இந்த திட்டம் தினமும் 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல், ரூ. 459 திட்டம் 6ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ. 719 திட்டம் தினமும் 1.5 ஜிபி டேட்டா மற்றும் ரூ. 839 திட்டம் தினமும் 2ஜிபி டேட்டா ஆகியவற்றை வழங்குகிறது.

ஜியோ வழங்கும் 84 நாட்கள் செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டங்கள்

ஜியோ வழங்கும் 84 நாட்கள் செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டங்கள்

சமீபத்திய விலை உயர்வால், ஜியோவிடம் ரூ. 300 முதல் 400 வரையிலான ப்ரீபெய்ட் திட்டம் எதுவும் இல்லை என்பது வேதனம். இருப்பினும், அனைத்து ஜியோ டேட்டா சலுகைகளிலும், நல்ல பலன்கள் மற்றும் OTT சந்தா சலுகைகளுடன் 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களை ஜியோ கொண்டுள்ளது. அவை ரூ. 666 என்ற விலையில் துவங்குகிறது. இந்த திட்டம் தினமும் 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ.719 திட்டம் தினமும் 2ஜிபி டேட்டா, ரூ.1066 திட்டம் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்குகிறது. இத்துடன் கூடுதல் 5ஜிபி மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. ரூ.1199 திட்டம் தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
BSNL Rs 399 Prepaid Plan Vs Similar Plans From Airtel Vi And Reliance Jio : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X