கூடுதலாக 3.21ஜிபி டேட்டா நன்மையை அறிவித்த பிஎஸ்என்எல்.!
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.14 திட்டத்தில் 1ஜிபி டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது, குறிப்பாக முன்பு வழங்கப்பட்டதை விட இருமடங்கு அதிகம் ஆகும்.
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும், அதன்படி இன்று அந்நிறுவனம் ரூ.399-திட்டத்தில் கூடுதல் டேட்டா நன்மையை அறிவித்துள்ளது, இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

பிஎஸ்என்எல் நிறுவன வலைதளங்களின் வெவ்வேறு வட்டராங்களில் ரூ.399 பிரீபெய்ட் திட்டத்தில் தினமும் 3.21ஜிபி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இது ஏற்கனவே இந்த திட்டத்தில் 1ஜிபி டேட்டா கிடைத்தது, தற்சமயம் முன்பை விட 2.21ஜிபி வரை அதிகம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த திட்டம் 74நாட்கள் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.399 திட்டம்:
பிஎஸ்என்எல் ரூ.399 திட்டத்தில் 3.21ஜிபி கூடுதல் டேட்டா நன்மையுடன், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். பிரத்யேக ரிங் பேக் டோன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை டெல்லி மற்றும் மும்பை போன்ற வட்டாரங்களுக்கும் பொருந்தும்.

ரூ.798 போஸ்ட்பெயிட் திட்டம்
இதற்குமுன்பு பிஎஸ்என்எல் ரூ.798 விலையில் போஸ்ட்பெயிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகை என்னவென்றால், தினசரி 100எஸ்எம்எஸ், 120ஜிபி 2ஜி/3ஜி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித
கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. பின்பு இதற்கு முன்பு அறிமுகம் செய்த சில பிரீபெய்ட் திட்டங்களைப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.155 ரீசார்ஜ்
பிஎஸ்என்எல் ரூ.155 ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா வீதம் 17 நாட்களுக்கு 34ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.14 மற்றும் ரூ.40 திட்டங்கள்:
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.14 திட்டத்தில் 1ஜிபி டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது, குறிப்பாக முன்பு வழங்கப்பட்டதை விட இருமடங்கு அதிகம் ஆகும். இதே போல் ரூ.40 திட்டத்தில் 1ஜிபி டேட்டா ஐந்து நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.57 மற்றும் ரூ.68 திட்டங்கள்:
இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.57 திட்டத்தில் தினமும் 1ஜிபி டேட்டா 21 நாட்கள் வழங்கப்படுகிறது, அதேபோல் ரூ.68 சலுகைக்கு 2ஜிபி டேட்டா ஐந்து நாட்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.78, ரூ.82, ரூ.85 திட்டங்கள்:
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.78 திட்டத்தில் 4ஜிபி டேட்டா மூன்று நாட்களுக்கு வழங்கப்படுகிறது, இதேபோன்று ரூ.82 திட்டத்தில் 4ஜிபி டேட்டா நான்கு நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.85 திட்டதில் 5ஜிபி டேட்டா ஏழு நாட்களுக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications