BSNL தரும் 70GB டேட்டா, வாய்ஸ் பிளான்.. 210GB வரை டேட்டா ரோல் ஓவர் கூட இருக்கு.. Jio, Airtel, Vi-க்கு ஆப்பு..
பிஎஸ்என்எல் (BSNL) என்று அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இப்போது இந்திய டெலிகாம் துறையில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதுவரை எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் தந்திடாத விலையில் ஒரு மாதத்திற்கு 70GB டேட்டா நன்மையை வழங்கும் புதிய திட்டத்தை டேட்டா ரோல் ஓவர் வசதியுடன் அறிமுகம் செய்துள்ளது. 1 மாதத்தில் நீங்கள் பயன்படுத்தாத டேட்டாவை சேமித்து வைத்து பின்வரும் நாட்களில் பயன்படுத்த இந்த திட்டம் அனுமதிக்கிறது. இது என்ன திட்டம்? இதன் கீழ் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் (BSNL) தொலைத்தொடர்பு நிறுவனம் இப்போது இந்தியாவின் மிக முக்கியமான டெலிகாம் ஆபரேட்டராக மாறியுள்ளது. இதற்கு தனியார் டெலிகாம் நிறுவனங்களின் விலை ஏற்றமே ஒரு காரணம் என்றாலும், பிஎஸ்என்எல் மலிவு விலையில் சில தனித்துவனமான திட்டங்களை அறிமுகம் செய்து மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதன் விளைவாக இதுவரை இல்லாத அளவில் பிஎஸ்என்எல் பக்கம் புதிதாக பல லட்சம் வடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர்.

BSNL தரும் 70GB டேட்டா, வாய்ஸ் பிளான்.. 210GB வரை டேட்டா ரோல் ஓவர் திட்டம்:
தொலைத்தொடர்புத் துறையில் மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வாரி வழங்கும் ஒரு டெலிகாம் நிறுவனமாக BSNL இப்போது அடையாளம் காணப்படுகிறது. நீண்ட கால செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் டேட்டா சலுகைகளை அடிமட்ட விலையில் வழங்கி மக்கள் மதிப்பில் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் நற்பெயரைக் கொண்டுள்ளது. அதன் சமீபத்திய திட்டங்கள் தனியார் நிறுவனங்களின் செயல்திறனைப் பாதித்துள்ளன என்பதில் சந்தேகமில்லை.
பட்ஜெட்டுக்கு ஏற்ற டேட்டா திட்டங்களைத் தேடும் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு BSNL தற்போது பல சிறப்பு திட்டங்களை அறிமுகம் செய்து, அதன் சேவையை சிறப்பாக வழங்கி வருகிறது. குறிப்பாக, BSNL இப்போது மலிவு விலையில் நீண்ட செல்லுபடியாகும் வேலிடிட்டி கொண்ட பல்வேறு திட்டங்களை வழங்குகிறது. இது போன்ற விருப்பங்களின் மிகப்பெரிய தேர்வுடன் தொழில்துறையில் தன்னை வேறுபடுத்திக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் ரூ. 399 போஸ்ட்பைட் பிளான் (BSNL Rs 399 Postpaid Plan):
BSNL நிறுவனம் இப்போது 30, 45, 70, 150, 160, 180, 336, 365, மற்றும் 425 நாட்கள் நீடிக்கும் திட்டங்களுடன் மில்லியன் கணக்கான மொபைல் பயனர்களுக்கு சேவை செய்கிறது. இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் ப்ரீபெய்ட் பயனர்கள் மட்டுமின்றி அதன் போஸ்ட்பைட் பயனர்கள் மீது கவனம் செலுத்த துவங்கியுள்ளது. ப்ரீபெய்ட் சேவையை மட்டும் மக்கள் பயன்படுத்தாமல், லாபம் தரும் போஸ்ட்பைட் திட்டங்களையும் மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
பிஎஸ்என்எல் தற்போது புதிதாக அறிமுகம் செய்துள்ள திட்டம் தான் பிஎஸ்என்எல் ரூ. 399 பிளான் (BSNL Rs 399 Plan). இந்த திட்டம் பிஎஸ்என்எல் போஸ்ட்பைட் வரிசையில் வருகிறது. இந்த திட்டம் அதன் வாடிக்கையாளர்களுக்கு 70GB டேட்டா நன்மையை வழங்குகிறது. போஸ்ட்பைட் திட்டம் என்பதனால், இது ஒரு முழு மாத செல்லுபடியை கொண்டுள்ளது. இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினமும் 100 எஸஎம்எஸ் நன்மையையும் வழங்குகிறது.
இந்த திட்டத்தின் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், இதில் டேட்டா ரோல் ஓவர் வசதி கிடைக்கப்பெறுகிறது. டேட்டா ரோல் ஓவர் வசதி என்று கூறுகையில், உங்கள் மாதாந்திர டேட்டா நன்மையில் மிஞ்சு உள்ள மிச்ச டேட்டாவை நீங்கள் அடுத்த மாதத்திற்கு வரவு வைத்துக்கொள்ளலாம். பின்வரும் நாட்களில் அந்த மிச்ச டேட்டாவையும் அடுத்த மாதத்தில் கிடைக்கும் 70GB டேட்டா நன்மையையும் சேர்த்து பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த திட்டம் 210GB வரையிலான டேட்டா ரோல் ஓவர் வரம்பை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications