BSNL-க்கு பெரிய மனசு.. கிராமங்களில் ரூ.399 க்கு 1400GB டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 40எம்பிபிஎஸ் ஸ்பீடு!
கிராமப்புறங்களில் இருக்கும் கஸ்டமர்களுக்கு வெறும் ரூ.399 விலைக்கு 1400 ஜிபி டேட்டாவை கொடுப்பது மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 40 எம்பிபிஎஸ் வேகத்தை பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் கொடுக்கிறது. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) கஸ்டமர்களுக்கு இவ்வளவு மலிவான விலைக்கு கிடைக்காது.
பிஎஸ்என்எல் பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிடைக்கும் பிராட்பேண்ட் திட்டங்களில் கிராமப்புறங்களில் இருக்கும் கஸ்டமர்களுக்கு பிரத்யேகமாக திட்டங்கள் கிடைக்கின்றன. இதில் பிஎஸ்என்எல் பைபர் ரூரல் ஹோம் வை-பை திட்டம் ரூ.399 (BSNL Rural Home Wi-Fi Plan Rs 399) ஆனது மற்ற நிறுவனங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மலிவாக இருக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.399 வை-பை திட்ட விவரங்கள் (BSNL Rs 399 Wi-Fi Plan Details): இந்த பிராட்பேண்ட் திட்டத்தை வணிக ரீதியாக பயன்படுத்த முடியாது. கிராமப்புறங்களில் இருக்கும் தனிநபர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஆகவே, வீடுகளுக்கு ஏற்ற திட்டமாக இருக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 1400 ஜிபி டேட்டா கிடைக்கும்.
இதை 40 எம்பிபிஎஸ் வேகத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 1400 ஜிபி டேட்டா முடிந்த பிறகு 4 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கும். ஆகவே, அன்லிமிடெட் டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். பிராட்பேண்ட் திட்டமாக இது இருப்பதால், லேண்ட்லைன் வழியாக அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) செய்து கொள்ளலாம்.
இந்த திட்டத்துக்கு மாதாந்திர வேலிடிட்டி கிடைக்கும். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பிராட்பேண்ட் திட்டங்கள் கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் கிடைக்கும். வை-பை டேட்டாவுடன் ஓடிடி சந்தா வேண்டுமானால், பிஎஸ்என்எல் பைபர் பேசிக் பிளஸ் ஓடிடி திட்டம் ரூ.699 (Fibre Basic Plus OTT Plan Rs 699) பக்கா ஆப்ஷாக இருக்கும்.
பிஎஸ்என்எல் ரூ.699 பேசிக் பிளஸ் ஓடிடி திட்ட விவரங்கள் (BSNL Rs 699 Basic Plus OTT Plan Details): இந்த பிராட்பேண்ட் திட்டமானது, கிராமப்புறங்கள் மட்டுமல்லாமல், நகர்ப்புறத்தில் இருக்கும் கஸ்டமர்களுக்கும் கிடைக்கும். இதை பெற்ற பிறகு 4000 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த டேட்டாவை 100 எம்பிபிஎஸ் வேகத்தில் கஸ்டமர்கள் பயன்படுத்தலாம்.
இந்த 4000 ஜிபி டேட்டாவை வேலிடிட்டி முன்னதாக பயன்படுத்தி முடித்துவிட்டால், 4 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்துக்கும் வாய்ஸ் கால்கள் கொடுக்கப்படுகிறது. ஆகவே, லேண்ட்லைன் வைத்து இருந்தால், அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை இந்த திட்டத்தின் வழியாக கஸ்டமர்கள் செய்து கொள்ள முடியும்.
இதற்கு அடுத்து ஓடிடி ஆப்களின் சந்தாவும் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் 2 ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. முதலாவது ஆப்ஷனில் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), ஹங்கமா (Hungama), லயன்கேட் (Lionsgate), ,ஷீமாரூமி (ShemarooMe) மற்றும் எபிக்ஆன் (EpicOn) ஆகிய ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. மேலும், ஜீ5 (ZEE5) ஓடிடியானது 2ஆவது ஆப்ஷனில் கிடைக்கிறது.
இதைவிட அதிக டேட்டா மற்றும் ஓடிடி ஆப்ஷன் வேண்டுமானால், பிஎஸ்என்எல் சூப்பர்ஸ்டார் பிரீமியம் பிளஸ் ரூ.999 திட்டத்தை (BSNL SuperStar Premium Plus Rs. 999 Plan) பயன்படுத்தி கொள்ளலாம். இதில் டேட்டா வேகமும் அதிகமாக இருக்கும். போஸ்ட் டேட்டா வேகமும் அதிகமாக இருக்கும். ஆகவே, டேட்டாவில் எந்த குறையும் இருக்காது.
பிஎஸ்என்எல் சூப்பர்ஸ்டார் பிரீமியம் பிளஸ் ரூ.1999 திட்ட விவரங்கள்: 200 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கிறது. 5000 ஜிபி டேட்டாவை மொத்தமாக பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 5000 ஜிபிக்கு பிறகு 10 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஜியோஹாட்ஸ்டார், ஜீ5, லயன்கேட், ஹங்கமா உள்ளிட்ட ஓடிடிகள் வருகின்றன.


Click it and Unblock the Notifications