Jio, Airtel, Vi-க்கு ஆப்பு.. ஆஃபரை அள்ளி வீசும் BSNL.. 100GB, 1000GB இல்ல.. 3300GB டேட்டா.. எந்த BSNL திட்டம்?
இந்திய டெலிகாம் துறையில் யாரும் எதிர்பார்த்திடாத தலைகீழ் மாற்றங்கள் கடந்த மாதத்தில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்களின் விலை அதிகரிப்பிற்கு பிறகு, தினம்-தினம் புதிய திட்டங்களை ஒவ்வொரு நிறுவனங்களும் மாறிமாறி அறிமுகம் செய்து வருகின்றனர். தனியார் நிறுவனங்களே விலை குறைத்து புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் போது, அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) மட்டும் சும்மாவா இருக்கும்? இருக்காது தானே. 3300GB டேட்டாவை வழங்கும் திட்டத்தின் விலையை அதிரடியாக BSNL இப்போது குறைத்துள்ளது.
ஆம் மக்களே, 100GB இல்லை 1000GB இல்லை, மொத்தமாக 3300GB டேட்டாவை வழங்கும் பிஎஸ்என்எல் இன் அட்டகாசமான திட்டத்தின் விலையை தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் முழுசாக ரூ. 100 விலை குறைப்பை அறிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலம் மிகவும் குறைந்த விலையாக ரூ. 300 விலை புள்ளி வரம்பில் இப்போது 3300GB டேட்டா நன்மையை வழங்கும் ஒரே ஒரு டெலிகாம் நிறுவனமாக பிஎஸ்என்எல் மாறியுள்ளது.

BSNL தரும் ரூ. 300 விலை புள்ளியில் 3300GB டேட்டா நன்மை.. Jio, Airtel, Vi-க்கு ஆப்பு:
வெறும் ரூ. 300 விலை புள்ளியில் 3300GB டேட்டா நன்மை கிடைப்பதனால், மக்கள் இப்போது குடும்பம் குடும்பமாக பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிற்கு மாறிவருகின்றனர். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த திடீர் விலை குறைப்பு காரணமாக, தற்போது ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்களின் தலையில் பிஎஸ்என்எல் நேரடியாக இடியை இறக்கியுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் பிராட்பேண்ட் சேவையின் கீழ் ரூ. 499 என்ற திட்டத்தை நீண்ட காலமாக வழங்கி வருகிறது. இந்த திட்டத்தை நீங்கள் இதற்கு முன்பு பிஎஸ்என்எல் தளத்தில் பிஎஸ்என்எல் ரூ.499 பிராட்பேண்ட் பிளான் என்ற பெயருடன் பார்வையிட்டிருக்கலாம். இப்போது இந்த திட்டத்தின் விலையை பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 100 வரை முழுமையாக குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, இந்தியாவில் இப்போது இந்த பிஎஸ்என்எல் ரூ.499 பிராட்பேண்ட் திட்டத்தின் விலை ரூ. 399 ஆக மாற்றப்பட்டுள்ளது. இனி விருப்பமுள்ள இந்திய மக்கள், பிஎஸ்என்எல் மொபைல் ஆப்ஸ் அல்லது பிஎஸ்என்எல் வலைத்தளம் சென்று, நேரடியாக இனி பிஎஸ்என்எல் ரூ.399 பிராட்பேண்ட் பிளான் (BSNL Rs 399 Broadband Plan) என்ற புதிய விலை மாற்றப்பட்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ.399 பிராட்பேண்ட் பிளான் (BSNL Rs 399 Broadband Plan):
இந்த ரூ.399 திட்டம் அதன் வாடிக்கையாலர்களுக்கு 3.3TB டேட்டா நன்மையை 40Mbps வேகத்தில் வழங்குகிறது. அதேபோல், இந்த திட்டத்துடன் உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையையும் பிஎஸ்என்எல் வழங்குகிறது. இந்த திட்டத்தின் ஒட்டுமொத்த டேட்டா நன்மை முடிந்த பிறகு, இது 4Mbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா நன்மையை வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
மிக மிகக் குறைந்த விலையில் அதிகமான டேட்டா நன்மையுடன் அதிவேக இணைய சேவையை தேடும் இந்திய மக்களுக்கு இந்த பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டம் (BSNL Broadband Plan) மிகவும் சூப்பரான ஒரு திட்டமாகும்.


Click it and Unblock the Notifications








