Home
News

இதுக்குமேல கொடுக்க முடியாது.. 4ஜி சேவைக்கு முன்பே பிஎஸ்என்எல் எடுத்த அதிரடி முடிவு.. முக்கிய மாற்றம்!

ஒட்டுமொத்த பிஎஸ்என்எல் (BSNL) வாடிக்கையாளர்களையும், வேறு நிறுவனத்துக்கு மாறாமல் கட்டிவைத்திருந்த முக்கியமான ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பிஎஸ்என்எல் 4ஜி சேவைக்கு முன்பே, டேட்டா பிளான்களில் மாற்றங்களை செய்துவிட வேண்டும் என்ற அந்த நிறுவனத்தின் முடிவு தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் 4ஜி சேவைக்கு பின் 5ஜி சேவைக்கே மக்களை தயார்படுத்தி வருகின்றன. ஆனால், ஒரு காலத்தில் டெலிகாமில் கொடிக்கட்டி பறந்த பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை கூட வழங்கவில்லை. இப்போது வரும், அப்போது வரும் என்று அதிருப்தி அடைந்து மற்ற நிறுவனங்களு மாறி தயாராக இருக்கும் வேளையில், மத்திய அரசு ரூ. 89,047 கோடி நிதி ஒதுக்கி 4ஜி சேவைக்கான பணியை முடுக்கிவிட்டது.

இதுக்குமேல கொடுக்க முடியாது.. பிஎஸ்என்எல் எடுத்த அதிரடி முடிவு!

இப்போது, நாட்டின் முக்கிய நகரங்களில் 2ஜி மற்றும் 3ஜி டவர்களை 4ஜி டவர்களாக மாற்றும் பணி அதிதீவிரமாக நடந்துவருகிறது. இதை பார்த்து, "ஒருவழியாக 4ஜி சேவை வந்துவிடும் போல" என்று பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் பெருமூச்சு விடுகையில், அந்த 4ஜி சேவைக்கு முன்பே ப்ரீபெய்ட் திட்டங்களில் மாற்றங்கள் ஏற்பட தொடங்கிவிட்டன.

பிஎஸ்என்எல் ரூ 398 திட்டம் விவரங்கள் (BSNL Rs 398 Plan Details): இதுவொரு 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாகும். இந்த 30 நாட்களில், நாள்தோறும் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடிந்தது. சொல்லப்போனால், இந்த திட்டம் மட்டுமே மற்ற எந்த டெலிகாம் நிறுவனங்களும் வழங்காத வகையில், கம்மியான விலையில் அன்லிமிடெட் டேட்டாவை கொடுத்து வந்தது.

ஆனால், இப்போது, அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனிமேல் பிஎஸ்என்எல் ரூ 398 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படாது. அதிகபட்சமாக 120 ஜிபி டேட்டாவை மட்டுமே 30 நாட்களில் பயன்படுத்திக்கொள்ள முடியும். அந்த வகையில், நாள்தோறும் 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். அதோடு அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களிடம் மிகப்பெரும் வரவேற்பு பெற்ற இந்த திட்டத்தை மாற்றியிருப்பது சற்று அதிருப்தி அடைய செய்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இருப்பினும், அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் கொடுக்கப்படுவதால் வரவேற்பு குறையாமல் இருக்க வாய்ப்புள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டால், இந்த அன்லிமிடெட் டேட்டா பிளான் அதிகப்படியாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

இதனால், முன்கூட்டியே இதில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 398 Prepaid Plan With Truly Unlimited Data Has Changed, Now Comes With 120GB Data Limit
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X