BSNL அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் கிடைக்கும் ரூ.398 திட்டம்.. இன்னும் கூடுதலாக 90 நாட்களுக்கு..

|

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்-BSNL) இப்போது தனது ரூ. 398 சிறப்பு கட்டண வவுச்சர் (STV) திட்டமான அதன் சந்தாதாரர்களுக்கான வரம்பற்ற ப்ரீபெய்ட் திட்டத்தில் மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டம் முதலில் ஜனவரி மாதத்தில் விளம்பர அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சலுகை ஏப்ரல் 9 ஆம் தேதியுடன் முடிவடையும் என்று கூறப்பட்டிருந்தது. இருப்பினும், டெல்கோ இந்த திட்டத்தின் கிடைக்கும் காலத்தை தற்பொழுது மேலும் 90 நாட்களுக்கு அதிகரித்து அறிவித்துள்ளது. இது ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள் விரும்பும் இன்னும் பல பலன்களைப் பெற அனுமதிக்கிறது.

STV 398 ப்ரீபெய்ட் திட்டத்தின் நீட்டிப்பு காலம்

STV 398 ப்ரீபெய்ட் திட்டத்தின் நீட்டிப்பு காலம்

இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தின் நீட்டிப்பு காலம் இப்போது ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கி அடுத்து வரும் ஜூலை 8 ஆம் தேதியுடன் முடிவடையும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. பிஎஸ்என்எல் STV ரூ. 398 ப்ரீபெய்ட் திட்டத்தின் நீட்டிப்பை அறிவிக்க நிறுவனம் தனது சென்னை கைப்பிடியிலிருந்து டிவிட்டர் பக்கத்தில் ஒரு புதிய ட்வீட் மூலம் தகவலைப் பகிர்ந்துள்ளது. அதன்படி, STV 398 திட்டத்தின் நன்மைகள் அப்படியே இருக்கின்றன, இத்திட்டம் எந்த FUPவரம்பும் இல்லாமல் வரம்பற்ற அதிவேக தரவை வழங்குகிறது.

இவர்கள் மட்டும் இந்த நன்மையைப் பயன்படுத்த முடியாது

இவர்கள் மட்டும் இந்த நன்மையைப் பயன்படுத்த முடியாது

ஹோம், எல்எஸ்ஏ மற்றும் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள எம்டிஎன்எல் நெட்வொர்க் உள்ளிட்ட தேசிய நெட்வொர்க்குகளில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையையும் இது வழங்குகிறது. இது ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மெசேஜ்களையும் வழங்குகிறது, மேலும் இது 30 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வருகிறது. பிரீமியம் எண்கள், ஐஎன் எண்கள், சர்வதேச எண்கள் மற்றும் பிற கட்டணம் வசூலிக்கக்கூடிய எண்களுக்கு இந்த வவுச்சரின் கீழ் எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் கால் நன்மைகளைப் பயன்படுத்த முடியாது என்று பிஎஸ்என்எல் கூறியுள்ளது.

ஹெச்பி நிறுவனத்தின் அசத்தலான லேப்டாப் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!ஹெச்பி நிறுவனத்தின் அசத்தலான லேப்டாப் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

இலவச சலுகைகள் பறிமுதல் செய்யப்படுமா?

இலவச சலுகைகள் பறிமுதல் செய்யப்படுமா?

இவற்றிற்கு, சந்தாதாரருக்குப் பொருந்தக்கூடிய கட்டணங்கள் வசூலிக்கப்படும். இந்த வவுச்சர் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், அங்கீகரிக்கப்படாத டெலிமார்க்கெட்டிங் அல்லது வணிக பயன்பாட்டிற்காக இது உருவாக்கப்படவில்லை என்றும் நிறுவனம் கூறியுள்ளது. மேலும், திட்டத்தின் தற்போதைய ரீசார்ஜ் காலாவதியாகும்போது பயன்படுத்தப்படாத இலவச சலுகைகள் பறிமுதல் செய்யப்படும் என்று பிஎஸ்என்எல் தனது சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ரகம் ரகமா., தரம் தரமா: ஆறு மாடல் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: ரொம்ப மலிவு விலை முதல் டாப் எண்ட் வரை!ரகம் ரகமா., தரம் தரமா: ஆறு மாடல் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: ரொம்ப மலிவு விலை முதல் டாப் எண்ட் வரை!

டி.எஸ்.எல் பிராட்பேண்ட் திட்டங்கள்

டி.எஸ்.எல் பிராட்பேண்ட் திட்டங்கள்

பி.எஸ்.என்.எல் ரூ. 299, ரூ. 399, மற்றும் ரூ. 555 ஆகிய மூன்று புதிய டி.எஸ்.எல் பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகப்படுத்திய பின்னர் இந்த தகவல் வெளிவந்துள்ளது. இவை அனைத்தும் 10 எம்.பி.பி.எஸ் வேகத்துடன் வருகின்ற திட்டங்கள் ஆகும். இது பி.எஸ்.என்.எல் இன் பாரத் ஃபைபர் திட்டங்களுடன் ஒப்பிடும்போது மெதுவாக இருக்கிறது. இந்த திட்டங்கள் முறையே 100 ஜிபி, 200 ஜிபி மற்றும் 500 ஜிபி வரம்புகளுடன் வந்துள்ளது. இந்த கொடுக்கப்பட்ட டேட்டா அளவு முடிவடைந்த பிறகு பயனர்கள் தொடர்ந்து மிகக் குறைந்த வேகத்தில் வெப் சர்பிங் செய்துகொள்ளலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
BSNL Rs 398 Prepaid Plan for Unlimited Voice and Data gets an extension of this plan for 90 more days : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X