அடேங்கப்பா... இப்படியொரு திட்டம் ஏர்டெல், ஜியோவிடம் கூட இல்லை: கெத்து காட்டும் BSNL.!
தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் பல அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் பல அசத்தலான டேட்டா வவுச்சர்களை வழங்கி வருகிறது.
அதாவது தனியார் டெலிகாம் நிறுவனங்கள் கூடு டேட்டா வவுச்சர் திட்டங்களில் கூடுதல் நன்மைகள் வழங்குவது கிடையாது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது டேட்டா வவுச்சர்களில் அதிக டேட்டாவுடன் சேர்த்து கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பிஎஸ்என்எல் பயனர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான டேட்டா வவுச்சர்-ஐ பற்றி பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.398 டேட்டா வவுச்சர்
பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் ரூ.398 விலையில் ஒரு டேட்டா வவுச்சர் உள்ளது. இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு வரம்பற்ற டேட்டா நன்மைகள் கிடைக்கிறது. மேலும் வரம்பற்ற டேட்டாவுடன் சேர்த்து வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட அசத்தலான சலுகைகளை வழங்குகிறது இந்த திட்டம்.
ஆனால் பிஎஸ்ன்எல் ரூ.398 டேட்டா வவுச்சர் ஆனது எந்தவொரு OTT நன்மைகளையும் வழங்கவில்லை. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். குறிப்பாக எந்தவொரு தனியார் டெலிகாம் நிறுவனங்களும் இதுபோன்ற ஒரு டேட்டா வவுச்சர்-ஐ அறிமுகம் செய்யவில்லை. பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டுமே இதுபோன்ற ஒரு அசத்தலான டேட்டா வவுச்சர் திட்டத்தை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4ஜி சேவை
பிஎஸ்என்எல் நிறுவனம் அற்புதமான திட்டங்களை வழங்குகிறது. அதேசமயம் எக்கசக்க சலுகைகளை கூட வழங்குகிறது. ஆனால் இந்நிறுவனம் இன்னும் அனைத்து இடங்களில் 4ஜி சேவையை கொண்டுவரவில்லை. மற்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் தற்போது 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ஆண்டு 4ஜி சேவையை அறிமுகம் செய்யும்.
டிசிஎஸ் நிறுவனம்
அதேபோல் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது பிஎஸ்என்எல். சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, பிஎஸ்என்எல் நிறுவனம் டிசிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து நாடு முழுக்க சுமார் 1 லட்சம் பகுதிகளில் 4ஜி சேவையை வெளியிட இருக்கிறது. பின்பு இதற்காக ஒரு லட்சம் பகுதிகளில் டிசிஎல் உபகரணங்களைப் பயன்படுத்த பிஎஸ்என்எல் நிறுவனம் அனுமதி பெற்று இருக்கிறது.

குறிப்பாக டிசிஎஸ் நிறுவனம் நீண்ட காலமாகவே பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்நிறுவனங்களின் கூட்டணியில் உள்நாட்டு 4ஜி நெட்வொர்க் பயன்படுத்த இருக்கிறது. அதேபோல் தனியார் டெலிகாம் நிறுவனம் 4ஜி வெளியீட்டிற்கு இவ்வாறு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிஎஸ்என்எல் உள்நாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதேபோல் ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் அடிப்படை ரீசார்ஜ் திட்டத்தின் விலையை உயர்த்தியது. இதுபோன்று விரைவில் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா நிறுவங்களும் கூட தங்களது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை உயர்த்த வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்திற்குப் பதிலாக ரூ.155 ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








