BSNL அதிரடி.. ரூ.397 விலை..5 மாச வேலிடிட்டி.. 2GB டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. அசத்தலான நன்மை.. எந்த திட்டம்?
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் அதன் வடிக்கையாளர்களுக்காக பல சுவாரசியமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் (Prepaid recharge) திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் 150 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் புதிய திட்டத்தை மலிவு விலையில் பிஎஸ்என்எல் வழங்க துவங்கியுள்ளது.
உங்களிடம் பிஎஸ்என்எல் சிம் கார்டு (BSNL SIM card) இருக்கிறதா? மிகவும் குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி உடன் தினமும் 2ஜிபி டேட்டா (Data), அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (Unlimited voice calls), தினமும் 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மை போன்ற நன்மைகளை வாரி வழங்கும் திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு சிறப்பு சலுகை திட்டமாக அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் ரூ 397 ப்ரீபெய்ட் பிளான் (BSNL Rs 397 Prepaid Plan):
பெரும்பாலான பிஎஸ்என்எல் பயன்பர்கள், அவர்களுடைய பிஎஸ்என்எல் சிம் கார்டை 2வது சிம் ஆகவே பயன்படுத்தி வருகிறார்கள். இது பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கும் தெரிந்த ஒரு கசப்பான உண்மை தான் என்றாலும், பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அதன் சேவையை வழங்கி வருகிறது. குறிப்பாக, இரண்டாவது சிம் ஆக இருந்தாலும், அதிக வேலிடிட்டியை தெரிந்தே வழங்கி வருகிறது.
இந்த வரிசையில், பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலையில் அதிக வேலிடிட்டியை வழங்கும் ஒரு ஸ்பெஷல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (BSNL special prepaid plan) தான் பிஎஸ்என்எல் இன் ரூ. 397 திட்டம். இந்த பிஎஸ்என்எல் ரூ 397 ப்ரீபெய்ட் திட்டம் 150 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையை வழங்குகிறது. இப்போது இந்த திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
இந்த புதிய சிறப்பு சலுகையுடன் பிஎஸ்என்எல் ரூ. 397 திட்டத்துடன் கிடைக்கும் 150 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை (150 days validity plan) வழங்குகிறது. இதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த திட்ட பயனர்களுக்கு 5 மாதங்களுக்கு வேலிடிட்டியை மொத்தமாக வழங்குகிறது. வெறும் 397 ரூபாய் செலவில் உங்களுக்கு 5 மாத வேலிடிட்டியை வழங்குகிறது. 5 மாத வேலிடிட்டி என்பது ஏறக்குறைய அரையாண்டு வேலிடிட்டியை வழங்குகிறது.

ரூ.300 விலையில் 150 நாள் வேலிடிட்டி.. பிஎஸ்என்எல் அதிரடி:
இந்த பிஎஸ்என்எல் ரூ. 397 திட்டம் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்று இப்போது பார்க்கலாம். இந்த பிஎஸ்என்எல் ரூ. 397 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம், தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை (2GB data per day daily) வழங்குகிறது. அதேபோல், இந்த திட்டம் வழக்கமான லோக்கல் (Local), எஸ்டிடி (STD), ரோமிங் (Roaming) அழைப்பு நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை வழங்குகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. குறிப்பிடப்பட்ட இந்த ஒட்டுமொத்த நன்மைகளையும் பிஎஸ்என்எல் நிறுவனம் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது. ஆனால், இந்த திட்டத்தின் வேலிடிட்டி மட்டும் 150 நாட்களுக்கு செல்லுபடியாகும் மக்களே. குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இது பெஸ்ட் திட்டமாகும்.
இந்த ப்ரீபெய்ட் திட்டம் இந்தியாவில் உள்ள பல வட்டங்களில் இப்போது பயன்படுத்த கிடைக்கிறது. இன்னும் சில வட்டங்களில் இந்த திட்டம் இன்னும் அணுக கிடைக்காமல் இருக்கிறது. உங்கள் வட்டத்தில் இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் நன்மை கிடைக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் பிஎஸ்என்எல் ஆப்ஸ் (BSNL Apps) மூலம் சோதனை செய்து பார்த்துக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








