அசத்துறீயேப்பா BSNL.. ஒரே ரீசார்ஜ்ல 150 நாட்களுக்கு ஓஹோன்னு நன்மைகள்.. 2GB டேட்டா.. இலவச வாய்ஸ் கால்!
ஜியோ, வோடபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்களை விட கம்மி விலையில் அசத்தலான சலுகைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். அதேபோல் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஜியோ, ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே இந்தியா முழுவதும் 5ஜி சேவையை வழங்கிவிட்டன. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் 4ஜி சேவையை கூட வழங்கவில்லை. சரி இப்போது விஷயத்துக்கு வரும் அதாவது கம்மி விலையில் 150 நாட்கள் வேலிடிட்டி மற்றும் தினசரி 2ஜிபி டேட்டாவுடன் எக்கச்சக்க சலுகைகளை வழங்கும் ஒரு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இப்போது அந்த திட்டத்தைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.397 ப்ரீபெய்ட் திட்டம் தான் அட்டகாசமான சலுகைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்புகள் போன்றவை 30 நாட்களுக்குக் கிடைக்கும். ஆனால் இந்த ரூ.397 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 150 நாட்கள்.
குறிப்பாக சிம் கார்டை நீண்ட நாட்கள் செயல்பாட்டில் வைத்திருக்க இந்த பிஎஸ்என்எல் ரூ.397 ப்ரீபெய்ட் திட்டம் மிகவும் உதவியாக இருக்கும். எனவே இந்த திட்டத்தில் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். இதைவிட ஒரு நல்ல ப்ரீபெய்ட் திட்டம் வேண்டும் என்று நினைக்கும் பயனர்கள் ரூ.2399 அல்லது ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டங்களைத் தேர்வு செய்வது நல்லது.
அதாவது பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், 30 நாட்களுக்கு ரிங்டோன், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் மற்றும் லோக்துன் கன்டென்ட்டிற்கான அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் 3ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், 30 நாட்களுக்கு பிஆர்பிடி ரிங்டோன், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் மற்றும் லோக்துன் கன்டென்ட்டிற்கான இலவச அணுகல் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அதிக சலுகைகளை வழங்கும் என்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.
சில வாரங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் எப்போது பிஎஸ்என்எல் இன் 4ஜி சேவை வழங்கப்படும் என்பது குறித்து பிஎஸ்என்எல் நிறுவன உயர்மட்ட அதிகாரி ஒருவர் பிரபல செய்தி நிறுவனத்திடம் பிரத்தியேக தகவலைத் தெரிவித்துள்ளார். அந்த அதிகாரி கூறியது என்னவென்றால், தற்போது நாடு முழுவதும் 4ஜி சிம் கார்டுகள் வழங்கும் பணிகள், 4ஜி டவர்களை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

மேலும் 4ஜி மென்பொருள் உள்கட்டமைப்பு பணிகள் முடிவடைய வரும் டிசம்பர் மாதம் வரையில் அவகாசம் தேவைப்படும் என்றும், 4ஜி டவர்கள் சோதனை மற்றும் மீதமுள்ள உள்கட்டமைப்பு பணிகளுக்குக் குறைந்தது 6 மாதங்கள் ஆகும் என்று கூறியுள்ளார். எனவே அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி விலையில் அதிக சலுகைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை தற்போது வைத்திருந்தாலும் 4ஜி சேவை இல்லை என்பது மிகப்பெரிய குறையாக இருக்கிறது. அதேசமயம் மற்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவை மற்றும் பட்ஜெட் விலையில் ப்ரீபேய்ட் திட்டங்களை வழங்கி அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது.


Click it and Unblock the Notifications








