Home
News

ஏழைக்கு ஏத்த BSNL.. மாதாந்திரம் ரூ.79 போதும்.. 150 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா!

ஒட்டுமொத்த டெலிகாம் கஸ்டமர்களும் மூக்கில் விரல் வைக்கும்படி மாதாந்திரம் வெறும் ரூ.79 செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daily Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் மட்டுமல்லாமல், 150 நாட்களுக்கு வேலிடிட்டியை கொடுத்து தட்டித்தூக்கி இருக்கிறது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம். இப்படி நம்ப முடியாத விலைக்கு 150 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை பிஎஸ்என்எல் கொடுத்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

மற்ற டெலிகாம் நிறுவனங்களில் 150 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் கிடைப்பதில்லை. ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு திட்டங்களை வைத்திருப்பது மட்டுமல்லாமல், அதை மலிவான விலைக்கு கொடுத்து வருகிறது. இவற்றுக்கான மாதாந்திர செலவானது மிகவும் மலிவாகவே இருப்பதால் நிச்சயம் லாபம் தரக்கூடியதாகவே இருக்கிறது. முதலில் ரூ 397 விலையில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை பார்ப்போம்.

ஏழைக்கு ஏத்த BSNL.. மாதாந்திரம் ரூ.79 போதும்.. 150 நாட்கள் வேலிடிட்டி!

பிஎஸ்என்எல் ரூ 397 திட்ட விவரங்கள் (BSNL Rs 397 Plan Details): மாதத்துக்கு வெறும் ரூ 79 செலவில் 150 நாட்களுக்கு சிம் கார்டு ஆக்டிவாக இருக்க வேண்டுமானால், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice Calls) சலுகைகள் வருகின்றன.

மேலும், 2 ஜிபி தினசரி டேட்டா (Daily Data) சலுகை கிடைக்கிறது. 2 ஜிபிக்கு பிறகு பேர் யூசேஜ் பாலிசி சலுகையின் கீழ் 40 கேபிபிஎஸ் வேக அன்லிமிடெட் டேட்டா சலுகை கிடைக்கிறது. அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த திட்டத்தில் செய்து கொள்ளலாம். ஆனால், இந்த டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை முதல் 30 நாட்களுக்கு பயன்படுத்தலாம்.

அதற்கு பிறகு வரும் 120 நாட்களுக்கு வேலிடிட்டி மட்டும் கிடைக்கும். இருப்பினும், சிம் ஆக்டிவ் தொடர்ந்து இருக்கும். ஒருவேளை பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 150 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் சலுகைகள் வேண்டுமானால், அவர்கள் ரூ 699 மதிப்பில் கிடைக்கும் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் (Prepaid Plan Recharge) செய்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ 699 திட்ட விவரங்கள் (BSNL Rs 699 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் 150 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. இந்த நாட்களில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கின்றன. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம்.

அதேபோல 100 எஸ்எம்எஸ் சலுகையும் 150 நாட்களுக்கு கிடைக்கிறது. மலிவான விலை கொண்டிருப்பதால், டேட்டா சலுகை மட்டும் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, நாளொன்றுக்கு 0.5 ஜிபி டேட்டாவை மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த 500 எம்பி டேட்டாவுக்கு பிறகு பேர் யூசேஜ் பாலிசியின் கீழ் 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த சலுகைகள் போக முதல் 60 நாட்களுக்கு பிஆர்பிடி (PRBT) சலுகையும் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கான மாதாந்திர செலவானது, வெறும் ரூ 139 ஆக மட்டுமே இருக்கிறது. ஆகவே, ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களை ஒப்பிடுகையில் இந்த திட்டங்கள் மட்டுமே அதிகப்படியான சலுகைகளை கொடுக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 397 Plan With Unlimited Calls 150 Days Validity 2GB Data 100 SMS Cheapest 5 Months Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X