Home
News

BSNL ஆட்டமே இனிதான்.. வெறும் ரூ.397-க்கு 150 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா!

கொடுக்கறதுல முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவை (Reliance Jio) அடிச்சிக்க முடியாது என்ற சொன்ன டெலிகாம் கஸ்டமர்கள் இப்போது, பிஎஸ்என்எல்லை (BSNL) அடிச்சிக்க முடியாது என்று சொல்ல தொடங்கிவிட்டனர். ஏனென்றால், அடிமட்ட விலைக்கு ப்ரீபெய்ட் திட்டங்களை (Prepaid Plan) பிஎஸ்என்எல் கொடுத்து வருகிறது. வெறும் ரூ.397 மதிப்பிலான திட்டத்தில் 150 நாட்களுக்கு வேலிடிட்டியை கொடுத்து மற்ற சிம் கார்டு கஸ்டமர்களை மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

மிகவும் மலிவான விலைக்கு திட்டங்களை வைத்திருக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாறும் கஸ்டமர்களின் எண்ணிக்கை முன்னணி டெலிகாம் நிறுவனங்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. ஒரு சில திட்டங்கள் மட்டும் அடிமட்ட விலைக்கு கிடைத்தால் பரவாயில்லை. ஆனால், பிஎஸ்என்எல்லில் ஒட்டுமொத்த திட்டங்களும் அப்படித்தான் இருக்கின்றன.

BSNL ஆட்டமே இனிதான்.. வெறும் ரூ.397-க்கு வருது 150 நாட்கள் வேலிடிட்டி!

இந்த வரிசையில் ரூ.397 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டம், கஸ்டமர்கள் வெகுவாக கவர்ந்துள்ளது. 5 மாதங்களுக்கு வேலிடிட்டி கிடைத்தால் யாருக்குத்தான் பிடிக்காது. ஆமாம், இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 150 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆகவே, சிம் கார்ட் ஆக்டிவ் மிகவும் மலிவான விலைக்கு இந்த திட்டத்தில் மட்டுமே கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 397 திட்ட விவரங்கள் (BSNL Rs 397 Plan Details): இந்த திட்டம் அடிமட்ட விலைக்கு கிடைப்பதால், சில சலுகைகளுக்கு கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனால், 150 நாட்கள் வேலிடிட்டி உறுதியாக கிடைக்கிறது. அதாவது, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா (2GB Data) சலுகை கொடுக்கப்படுகிறது.

இந்த தினசரி டேட்டா லிமிட் முடிந்த பிறகு ஃபேர் யூசேஜ் பாலிசியின் (Fair Usage Policy) கீழ் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கிறது. அதேபோல 100 எஸ்எம்எஸ்களை நாளொன்றுக்கு பிஎஸ்என்எல் கஸ்டமர் செய்து கொள்ளலாம். மேலும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகையும் கிடைக்கிறது.

ஆகவே, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் நேஷனல் ரோமிங் கால்களை (National Roaming Calls) செய்து கொள்ள முடியும். இருப்பினும், இந்த மூன்று சலுகைகளையும் 150 நாட்களுக்கும் பயன்படுத்த முடியாது. ரீசார்ஜ் செய்த பிறகு முதல் 30 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும். ஆகவே, 60 ஜிபி டேட்டா கிடைக்கும்.

இதற்கு பிறகு மீதமுள்ள 120 நாட்களுக்கு பிஎஸ்என்எல் சிம் கார்டு தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும். ஆகவே, 30 நாட்களுக்கு பிறகு டேட்டா, வாய்ஸ் கால்கள் அல்லது எஸ்எம்எஸ் சலுகை வேண்டுமானால் ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். இந்த பிஎஸ்என்எல் ரூ 397 திட்டத்தில் லாபம் கிடையாது போல என்று உங்களுக்கு தோன்றலாம். அது உண்மையல்ல.

ஏனென்றால், 150 நாட்களுக்கு சிம் ஆக்டிவாக இருக்க வேண்டுமானால், ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களில் குறைந்தபட்சம் ரூ.1000 மதிப்பில் ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். அதிலும், டேட்டா சலுகை மிகவும் குறைவாகவே கிடைக்கும். ஆகவே, எப்படி பார்த்தாலும், இந்த ப்ரீபெய்ட் திட்டம் நல்ல லாபம் தரக்கூடிய திட்டமாகும்.

இதேபோல பல்வேறு திட்டங்களில் வேலிடிட்டி கூடுதலாகவும் சலுகைகள் தேவைக்கு ஏற்பவும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் கிடைக்கிறது. ஆனால், 4ஜி சேவைகள் நாடு முழுவதும் கொடுக்கப்படவில்லை. அதேநேரத்தில் டேட்டா வேகம் மிகவும் குறைவாக இருக்கும். ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களில் கிடைத்த வேகத்தை இதில் எதிர்பார்க்க முடியாது.

மொபைல் பேங்கிங், யுபிஐ போன்ற ஆப்களை பயன்படுத்தும் கஸ்டமர்கள் மற்றும் ஓடிடி ஆப்களை பயன்படுத்தும் கஸ்டமர்களுக்கு பிஎஸ்என்எல் கொடுக்கும் வேகம் போதுமானதாக இருக்காது. ஒருவேளை முழு வீச்சில் 4ஜி சேவைகளை பிஎஸ்என்எல் வழங்கிய பிறகு வேகம் ஈடுகொடுக்கலாம். இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதை மறுக்க முடியாது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 397 Plan With 150 Days Validity Unlimited Voice Calls 2GB Data Check Cheapest 5 Months Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X