BSNL பலே திட்டம்.. 150 நாள் வேலிடிட்டி.. 2GB டேட்டா தினமும்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 100 SMS.. எந்த திட்டம்?
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் அதன் பிஎஸ்என்எல் 4ஜி (BSBL 4G) சேவைகளை நாடு முழுவதும் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. BSNL டெலிகாம் நிறுவனத்திற்கு புத்துயிர் தரும் நோக்கத்தில், இந்திய அரசு, இந்த ஆண்டு அதன் பட்ஜெட்டில் ரூ. 83,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை காரணமாக, தற்போது பிஎஸ்என்எல் 4G சேவைகள் இந்தியா முழுவதும் உள்ள பல முக்கிய நகரங்கள் மற்றும் தொலைத்தொடர்பு வட்டாரங்களில் கிடைக்க துவங்கியுள்ளன. கூடுதலாக, BSNL நிறுவனம் 25,000-க்கும் அதிகமான புதிய 4G டவர்களை நிறுவியுள்ளது. பிஎஸ்என்எல் தற்போது பல புதிய திட்டங்களை வெளியிட்டு வருகிறது.
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), Vodafone ஐடியா (Vodafone Idea) அல்லது விஐ (Vi) ஆகியவற்றில் கிடைக்காத மலிவு விலை திட்டங்களை BSNL இப்போது இந்தியாவில் வழங்கி வருகிறது. என்ன தான் பல திட்டங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தாலும், ரூ. 397 திட்டத்தை வைத்து Jio, Airtel, Vi டெலிகாம் நிறுவனங்களின் தலையில் BSNL ஒரே போடாக போட்டுள்ளது.

தலைவா BSNL நீ கிரேட்.. வெறும் ரூ. 397 விலையில் 5 மாத வேலிடிட்டியா?
இந்த திட்டம் வெறும் ரூ. 397 விலையில் 5 மாதங்கள் (150 நாட்கள்) செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது. என்னது 5 மாத செல்லுபடியாகும் வேலிடிட்டி இப்போது வெறும் ரூ. 397 விலையில் கிடைக்கிறதா? என்று நீங்கள் ஆச்சரியமாக கேட்பது எங்களுக்கு இங்கே கேட்கிறது. உண்மை தான் மக்களே, உங்களிடம் பிஎஸ்என்எல் சிம் கார்டு இருக்கிறதென்றால், நீங்கள் ரூ. 400 விலைக்குள் 5 மாதங்களுக்கு ஒரே ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும்.
நீங்கள் BSNL சிம் கார்டை இரண்டாம் நிலை எண்ணாகப் பயன்படுத்தினாலும் சரி, இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சரி, இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய பிஎஸ்என்எல் ரூ. 397 திட்டத்தின் (BSNL Rs 397 Plan) நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம். இந்த ரீசார்ஜ் திட்டம் 150 நாட்களுக்கு இலவச இன்கமிங் அழைப்புகளைப் பெற அனுமதிக்கிறது. இது உங்கள் சிம் கார்டை 150 நாளுக்கு ஆக்ட்டிவாக வைக்கிறது.
BSNL வழங்கும் 150 நாட்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்?
முதல் 30 நாட்களுக்கு, இந்த திட்டம் நாட்டில் உள்ள எந்த எண்ணுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. அதேபோல், இது நாடு முழுவதும் இலவச ரோமிங் நன்மையையும் வழங்குகிறது. இருப்பினும், ஆரம்ப 30 நாட்களுக்குப் பிறகு, பயனர்கள் அழைப்பு நன்மைக்காக டாப் ஆப் செய்துகொள்ள வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. டாக் டைம் ரீசார்ஜ் திட்டங்களை ரீசார்ஜ் செய்துகொண்டால் வாய்ஸ் கால் நன்மை கிடைக்கும்.
ஆனால், எந்த கட்டணமுமின்றி 150 நாட்களும் இலவசமாகவே இன்கமிங் அழைப்புகளை நீங்கள் அனுபவிக்கலாம். அதேபோல், இந்த திட்டத்தில் முதல் 30 நாட்களுக்கு தினசரி 2GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. 30 நாளுக்கு பிறகு, 40kbps வேகத்தில் உங்களுக்கு அன்லிமிடெட் டேட்டா நன்மையை இந்த திட்டம் வழங்குகிறது. கூடுதலாக, இத்துடன் முதல் 30 நாட்களுக்கு தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் நன்மையையும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








