BSNL தான் இனி கிங்.. ரூ. 300 விலை புள்ளியில்.. 150 நாளுக்கு ஒரே பிளான்.. 5 மாசத்துக்கு என்ஜாய்.. எந்த பிளான்?
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்து, இந்திய தொலைத்தொடர்பு துறையில், மக்கள் விரும்பும் ஒரு நம்பிக்கையான டெலிகாம் ஆபரேட்டராக மாறி வருகிறது. மக்களின் நம்பிக்கையை பெற, பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இப்போது மலிவு விலையில் அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை (BSNL Prepaid Plan) தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில், BSNL தற்போது வெறும் ரூ. 300 விலை புள்ளியில் 150 நாட்களுக்கு செல்லுபடியாகும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதுவரை இந்தியாவில் உள்ள எந்தவொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் வெறும் 300 விலை வரம்பில் இப்படி ஒரு திட்டத்தை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) என்று அழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்களிடம் இந்த விலை வரம்பில் 150 நாட்களுக்கு செல்லுபடியாகும் நெருங்கிய திட்டம் கூட இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

150 நாள் வேலிடிட்டி உடன் பிஎஸ்என்எல் ரூ 397 பிளான் (BSNL Rs 397 Plan With 150 Days Validity):
பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள புதிய திட்டம் ரூ. 397 விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் பிஎஸ்என்எல் ரூ 397 பிளான் (BSNL Rs 397 Plan) என்ற பெயருடன் வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் 150 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்துடன் கிடைக்கும் மற்ற நன்மைகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
புதிய பிஎஸ்என்எல் ரூ 397 திட்டம் (BSNL Rs 397 Plan) தினசரி 2GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் என்ற நன்மைகளையும் வழங்குகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த புதிய பிஎஸ்என்எல் திட்டங்களின் டேட்டா, வாய்ஸ் கால்ஸ் மற்றும் SMS நன்மைகள் முதல் 30 நாட்களுக்கு மட்டுமே தடையின்றி கிடைக்கும்.
இதற்கு பிறகு, உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற டேட்டா வவுச்சர் மற்றும் வாய்ஸ் பேக் அல்லது டாப் அப் ரீசார்ஜ் பேக்குகளை நீங்கள் ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த திட்டம் உங்களுக்கு 150 நாட்களுக்கு வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த காலத்தில் நீங்கள் உங்கள் பிஎஸ்என்எல் சிம் கார்டை ஆக்டிவேட் நிலையில் வைப்பதோடு, இன்கம்மிங் அழைப்புகளை 150 நாளுக்கு வழங்குகிறது.
இந்த திட்டத்துடன் BSNL நிறுவனம் பல இலவச நன்மைகளையும் வழங்கி அசத்துகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் இலவச நன்மைகளும் கூட 30 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் தான் வருகிறது. ஆனால், இந்த திட்டம் உங்கள் பிஎஸ்என்எல் சிம் கார்டை 150 நாட்களுக்கு ஆக்டிவ் நிலையில் வைக்கிறது. ரூ. 300 விலை புள்ளியில் இதுவொரு சிறந்த திட்டமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








