பிஎஸ்என்எல்லுக்கு கும்பிடு.. வெறும் ரூ.397 போதும்.. 4 மாதம் வேலிடிட்டி.. 2 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் ரூ.397 பிளானில் (BSNL Rs 397 Plan) கிட்டத்தட்ட 150 நாட்களுக்கு (4 மாதங்கள்) வேலிடிட்டி வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளும் கிடைக்கின்றன. இந்த திட்டத்தின் முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நாட்டின் முன்னணி டெலிகாம் (Telecom) நிறுவனங்களின் ப்ரீபெய்ட் (Prepaid) மற்றும் போஸ்ட்பெய்ட் (Postpaid) திட்டங்களுக்கு நிகராக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. இந்த திட்டங்களின் சலுகைகளை பார்த்தால் நியாயமான விலைக்கே நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.

இதனாலேயே, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் (BSNL Customers), மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு முற்றிலும் மாறாமல் இருக்கின்றனர். ஆகவே, கைவசம் இருக்கும் வாடிக்கையாளர்களை 4ஜி நெட்வொர்க் கொடுக்கப்படும் வரை தக்க வைக்க பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை கம்மியான விலையில் கொடுத்து வருகிறது. அந்த வரிசையில், 150 நாட்கள் வேலிடிட்டி உடன் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலான டேட்டா மற்றும் கால் சலுகைகளை ரூ.397 திட்டம் கொண்டுள்ளது.
இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டெய்லி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் என்று அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், உங்களுக்கு ஒதுக்கப்பட்ட டேட்டாவை முற்றிலும் தீர்த்து விட்டாலும், 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த 4 கேபிபிஎஸ் டேட்டா 150 நாட்களுக்கும் வழங்கப்படும். இப்போது, இந்த திட்டத்தின் முழு விவரங்கள், முதல் 30 நாட்களுக்கு கொடுகப்படும் சலுகைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
பிஎஸ்என்எல் ரூ 397 பிளான் விவரங்கள் (BSNL Rs 397 Plan Details): இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு டேட்டா (Data), வாய்ஸ் கால்கள் (Voice Calls) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் வழங்கப்படும். அதாவது, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்துக்கு முதலில் 180 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது 150 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதுவும், கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுப்பதால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த 150 நாள் வேலிடிட்டி முதல் 30 நாட்களுக்கு பிறகு இன்கமிங் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு மட்டுமே பொருந்தும்.
அதாவது, இந்த திட்டத்தின் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் முதல் 30 நாட்களுக்கு வழங்கப்படும். அதன்பிறகு பிளானின் வேலிடிட்டி மட்டுமே மீதமுள்ள 120 நாட்களுக்கு கிடைக்கும். இந்த நேரத்தில் இன்கமிங் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை பெற்று கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், 40 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து இன்டர்நெட் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தை பொறுத்தவரையில், இன்கமிங் கால்கள் (Incoming Call) மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு கூட ப்ரீபெய்ட் பிளானின் வேலிடிட்டி முக்கியமானதாக இருக்கிறது. இல்லையென்றால், அந்த சிம் கார்டு ஆக்டிவாக இருக்காது. அதற்கு வரும் கால்களையும் பெற முடியாது. ஆகவே, அதன் வாடிக்கையாளர்கள் அதிக வேலிடிட்டி கொண்ட பிளான்களையே ரீசார்ஜ் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக, பிஎஸ்என்எல் நிறுவனமும் அதிக வேலிடிட்டி கொண்ட பிளான்களை வழங்கி, அதோடு 30 நாட்களுக்கு டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுத்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. முன்னதாக, இந்த பிளானில் 60 நாட்களுக்கு டேட்டா மற்றும் அவுட்கோயிங் கால் சலுகைகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








