Home
News

BSNL-ஐ கொண்டாடும் மக்கள்.. 300 ரூபாய் ரேஞ்.. 150 நாள் வேலிடிட்டி.. ஸ்பெஷல் வாய்ஸ், டேட்டா, SMS-லாம் இருக்கு..

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் அதிக நன்மையை வழங்கும் ஒரு ஸ்பெஷல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (BSNL special prepaid recharge plan) அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்பெஷல் ப்ரீபெய்ட் திட்டம் 150 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி (150 days validity) உடன் வருகிறது. ஆனால், இதன் விலை வெறும் 300 ரூபாய் ரேஞ்சில் (BSNL plan under Rs 300 price range) இருப்பதனால் மக்கள் இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தை தூக்கி கொண்டாட துவங்கியுள்ளனர்.

என்னது 150 நாள் செல்லுபடியாகும் திட்டம் வெறும் 300 ரூபாய் ரேஞ்சில் கிடைக்கிறதா? என்று உங்களில் சிலர் சந்தேகத்துடன் கேள்வி எழுப்புவது எங்களுக்கு இங்கே கேட்கிறது. உண்மை தான்ங்க, வெறும் 300 ரூபாய் ரேஞ்சில் 5 மாதங்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை பிஎஸ்என்எல் இன் இந்த சிறப்பு திட்டம் வழங்குகிறது. இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம் பற்றிய விபரங்கள் இதோ.

BSNL-ஐ கொண்டாடும் மக்கள்.. 300 ரூபாய் ரேஞ்.. 150 நாள் வேலிடிட்டி..

BSNL-ஐ கொண்டாடும் மக்கள்.. 300 ரூபாய் ரேஞ்.. 150 நாள் வேலிடிட்டி:

பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலையில் அதிக வேலிடிட்டியை வழங்கும் ஸ்பெஷல் ப்ரீபெய்ட் திட்டமாக (BSNL special prepaid plan) பிஎஸ்என்எல் ரூ. 397 திட்டத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்த பிஎஸ்என்எல் 397 பிளான் (BSNL 397 Plan) 150 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையை வழங்குகிறது. 150 நாட்கள் என்று பார்க்கையில் இந்த திட்டம் 5 மாதங்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

வெறும் 397 ரூபாய் விலையில் 5 மாதங்கள் செல்லுபடியாகும் திட்டத்தை வழங்கியதால், மக்கள் இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தை மகிழ்ச்சியோடு பாராட்டி வருகிறார்கள். ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்கள் திடீரென அவற்றின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்தன. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். மக்களுக்கு கைகொடுக்கும் விதமாக மலிவு விலை திட்டங்களை வழங்கிய ஒரே டெலிகாம் ஆபரேட்டராக BSNL மட்டுமே சேவை வழங்கியது.

பிஎஸ்என்எல் 397 பிளான் (BSNL 397 Plan):

இந்த சூழ்நிலையில் மக்கள் நம்பிக்கை பிஎஸ்என்எல் பக்கம் மாறிவிட்டது. இப்போது 150 நாட்களுக்கு வெறும் 397 கொடுத்தால் போதும் என்று புதிய திட்டத்தை வழங்கியதுடன், பிஎஸ்என்எல் நெட்வொர்க்கை மக்கள் இப்போது தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். சரி, இப்போது இந்த பிஎஸ்என்எல் ரூ. 397 திட்டம் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்று இப்போது பார்க்கலாம். பிஎஸ்என்எல் ரூ. 397 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம், தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை (2GB data per day daily) வழங்குகிறது.

அதேபோல், இந்த திட்டம் வழக்கமான லோக்கல் (Local), எஸ்டிடி (STD), ரோமிங் (Roaming) அழைப்பு நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை வழங்குகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. குறிப்பிடப்பட்ட இந்த ஒட்டுமொத்த நன்மைகளையும் பிஎஸ்என்எல் நிறுவனம் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது.

5 மாத காலத்தில் இன்கம்மிங் அழைப்பு உடன் SIM ஆக்டிவ்:

ஆம், இதுவொரு ஸ்பெஷல் திட்டம் என்பதனால், இந்த திட்டத்துடன் கிடைக்கும் நன்மைகளுக்கு ஒரு குறுகிய காலம் மட்டுமே வேலிடிட்டியை வழங்கப்படுகிறது. ஆனால், இந்த திட்டத்தின் வேலிடிட்டி மட்டும் 150 நாட்களுக்கு செல்லுபடியாகும் நன்மையை வழங்குகிறது. இதன் பொருள், 150 நாட்களுக்கு உங்கள் பிஎஸ்என்எல் சிம் கார்டை ரீசார்ஜ் செய்யாமல் ஆக்டிவ் நிலையில் வைத்துக்கொள்ளலாம். இந்த 5 மாத காலத்தில் இன்கம்மிங் அழைப்புகளை நீங்கள் தடையில்லாமல் பயப்படுத்திக்கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 397 Plan 150 Days Validity Special Plan Offers Unlimited Voice 2GB Data 100 SMS For 30 Days
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X