ஜியோவிற்கு போட்டியாக புதிய சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்.!
இந்த சிறப்பு திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. பின்பு பிரத்யேக ரிங்-பேக்-டோன் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களையும் அறிவித்த வண்ணம் உள்ளது, அந்தவகையில் தற்சமயம் பீரிபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.39/- விலையில் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பீரிபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.99 மற்றும் ரூ.319 விலையில் புதிய சலுகைகள் எவ்வித தினசரி காட்டுப்பாடுகளும் இன்றி அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது அறிவித்துள்ள ரூ.39 திட்டம் பல்வேறு வரவேற்பை பெற்றுள்ளது.

ரூ.39/- திட்டத்தின் சிறப்பம்சம்:
பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது அறிவித்துள்ள ரூ.39/- பீரிபெயிட் திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், பயனர்களுக்கு தினமும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித தினசரி கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டம் 10 நாட்களுக்கு பயன்படும என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் அனைத்து பிஎஸ்என்எல் வட்டாரங்களிலும்
வழங்கப்படுகிறது.

எஸ்எம்எஸ்:
இந்த சிறப்பு திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. பின்பு பிரத்யேக ரிங்-பேக்-டோன் உள்ளிட்டவையும்
வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு பயனர்களுக்கு இந்த சலுகை பயன்படும் வகையில் உள்ளது என்று தான் கூறவேண்டும்.

பிஎஸ்என்எல் ரூ.99 மற்றும் ரூ.319 திட்டங்கள்:
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.99 திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ்கால் மற்றும் பிரத்யேக ரிங்-பேக்-டோன் போன்ற சலுகைகள் 26நாட்களுக்கு வழங்கப்படுகிறது. பின்பு ரூ.319 திட்டதில் இதே சலுகைகள் 90நாட்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ:
ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள ரூ.49 திட்டத்தில் தினசரி அன்லிமிட்டெட் வாய்ஸ்கால் மற்றும் 50எஸ்எம்எஸ் போன்றவை 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதே சலுகையில் 1ஜிபி அதிவேக 4ஜி டேட்டாவும், 1ஜிபி நிறைவுற்றதும் டேட்டா வேகம் குறிப்பிட்ட அளவு குறைக்கப்படுகிறது.

ஃபைபர் பிராட்பேன்ட்
இற்குமுன்பு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஃபைபர் பிராட்பேன்ட் ரூ.1,045, ரூ.1,395 மற்றும் ரூ.1,895 போன்ற திட்டங்களில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 50ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications