Home
News

பிஎஸ்என்எல் ரூ.365 ப்ரீபெய்ட் திட்டம்: 365 நாட்கள் வேலிடிட்டி.! என்னென்ன சலுகைகள்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான திட்டங்கள் மற்றும் அசத்தலான சலுகைகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் உள்ளன. ஆனால் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் 4ஜி சேவையை அனைத்து இடங்களிலும் வழங்கி வருகிறது.

நிறுவனங்கள் 5ஜி சேவையை

பிஎஸ்என்எல் நிறுவனம் இன்று வரை அனைத்து இடங்களிலும் 4ஜி சேவையை வழங்கவில்லை. மேலும் பல நிறுவனங்கள் 5ஜிசேவையை கொண்டுவர முயற்சி செய்து வருகின்றன. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனமும் 4ஜி சேவையை அனைத்து இடங்களுக்கும்
கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்.

 ஒரு அசத்தலான

பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு அசத்தலான பிரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது, அதன் விலை ரூ.365-ஆக உள்ளது. அதன்படி பிஎஸ்என்எல் ரூ.365 பிரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள்,வரம்பற்ற குரல் அழைப்புகள் போன்ற பல இலவசங்களுடன் வருகிறது. எவ்வாறாயினும், இந்த இலவசங்கள் ரீசார்ஜ் செய்யப்பட்ட 60 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

ரூ.365 பிரீபெய்ட் திட்டமானது,

பிஎஸ்என்எல் ரூ.365 பிரீபெய்ட் திட்டமானது, நிறுவனத்தின் கேரள இணையதளத்தில் நேரலையில் உள்ளது. இருப்பினும் இது சென்னை - தமிழ்நாடு, ஆந்திரா, அசாம், பீகார்-ஜார்க்கண்ட், குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, கொல்கத்தா- மேற்கு வங்கம்,வடகிழக்கு, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் - சத்தீஸ்கர், ஒரிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உ.பி.-கிழக்கு, மற்றும் உ.பி.-மேற்கு போன்ற வட்டங்களிலும்அனுக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

.365 திட்டத்தில் திட்டத்தில்

பிஎஸ்என்எல் ரூ.365 திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படும் தினசரி 2ஜிபி ஆனது உச்சவரம்பு வரம்பை அடைந்த பிறகு, இணைய வேகம் 80 கே.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படுகிறது. இந்தத் திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களையும், மற்றும் இலவச தனிப்பயனாக்கப்பட்ட ரிங் பேக் டோன் (பிஆர்பிடி) நன்மையையும் தொகுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கிறது, அதாவது SMS அல்லது USSD

மேலும் இலவச PRBT நன்மையானது CtopUp மற்றும் ஆன்லைன் ரீசார்ஜ்களில் மட்டுமே வழங்கப்படுகிறது, அதாவது SMS அல்லது USSD வழியாக ரீசார்ஜ் செய்யும் போது அணுக கிடைக்காது என்று அர்த்தம்.

60 நாட்களுக்கு மட்டுமே

ஏற்கனவே குறிப்பிட்டபடி, பிஎஸ்என்எல் ரூ.365 திட்டத்தில் வழங்கப்படும் இலவசங்களின் செல்லுபடியாகும் தன்மை 60 நாட்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும் ஆனால் திட்டத்தின் மொத்த செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள் ஆகும். அதாவது 60 நாட்கள் செல்லுபடியாகும் இலவசங்கள் முடிந்த பிறகு, சந்தாதாரர்கள் வாய்ஸ் மற்றும் டேட்டா நன்மைகளை தொடர்ந்து பயன்படுத்த வாய்ஸ் மற்றும் டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும்.

Best Mobiles in India

English summary
BSNL Rs.365 Prepaid Plan: Validity, Benefits and Other Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X