தினமும் 1 ரூபாய் தான் செலவு.. 365 நாட்களுக்கு 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை தரும் ஒரே திட்டம்..

|

இந்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனம் மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து நாட்டில் தனது சேவையை வழங்கிவருகிறது. அந்த வரிசையில் டெல்கோவில் ரூ. 365 ப்ரீபெய்ட் மொபைல் போன் திட்டம் தற்பொழுது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது ஒரு வருடாந்திர திட்டமாகும். ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நெட்வொர்க்கில் கூட இப்படி ஒரு மலிவான வருடாந்திர திட்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

BSNL ரூ. 365 திட்டம்

BSNL ரூ. 365 திட்டம்

BSNL ரூ. 365 திட்டத்தின் விலை குறிப்பிடுவது போல, இந்த திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. ஆனால், இதன் இலவச நன்மைகள் மட்டும் ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து அடுத்த 60 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் வாய்ஸ் கால் நன்மை, டேட்டா நன்மை மற்றும் SMS ஆகிய நன்மைகள் உங்களுக்கு 365 நாள் வேலிடிட்டி உடன் கிடைக்கிறது. இது பற்றிய கூடுதல் விபரங்களை பார்க்கலாம்.

ஜியோ vs ஏர்டெல் vs BSNL

ஜியோ vs ஏர்டெல் vs BSNL

பிஎஸ்என்எல்லின் ரூ. 365 ரீசார்ஜ் திட்டம் என்பது எந்தவொரு தொலைத் தொடர்பு ஆபரேட்டரிடமிருந்தும் கிடைக்காத ஒரு மலிவான வருடாந்திர திட்டமாகும். ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து கிடைக்கும் மலிவான வருடாந்திர திட்டமானது வெறும் ரூ. 1,299 விலையில் கிடைக்கிறது. அதேபோல், ஏர்டெல் நிறுவனம் வழங்கும் மலிவான வருடாந்திர திட்டத்தின் விலை ரூ. 1,498 ஆகும். இதன் இலவச நன்மைகள் திட்டத்தின் ஒட்டுமொத்த வேலிடிட்டி உடன் செல்லுபடியாகும்.

கரும்பு திண்ண கூலியாம்- வேலை: பீட்சா சாப்பிட்டு நெட்பிளிக்ஸ் பார்க்கனும்., சம்பளம்: ரூ.36,000!கரும்பு திண்ண கூலியாம்- வேலை: பீட்சா சாப்பிட்டு நெட்பிளிக்ஸ் பார்க்கனும்., சம்பளம்: ரூ.36,000!

ரூ. 365 வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் தரும் அன்லிமிடெட் நன்மைகள்

ரூ. 365 வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் தரும் அன்லிமிடெட் நன்மைகள்

ஆனால், BSNL திட்டத்தில் கிடைக்கும் 365 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி என்பது, பிஎஸ்என்எல் சிம் கார்டை செயலில் வைத்திருக்க உதவும். பிஎஸ்என்எல் ரூ. 365 வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் நாடு முழுவதும் அனைத்து வட்டங்களிலும் கிடைக்கிறது. இத்திட்டம் அனைத்து நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினமும் 2 ஜிபி அதிவேக டேட்டா, 2ஜிபி-க்கு பிறகு 40kbps வேகத்தில் வரம்பற்ற டேட்டா நன்மை மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். ஆகியவற்றை வழங்குகிறது.

ஜியோ மற்றும் ஏர்டெல் வழங்கும் வருடாந்திர திட்டத்தின் வேலிடிட்டி

ஜியோ மற்றும் ஏர்டெல் வழங்கும் வருடாந்திர திட்டத்தின் வேலிடிட்டி

இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகளான பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் சந்தா ஆகிய பிற கூடுதல் நன்மைகள் மட்டும் 60 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ. 1,299 திட்டம் 336 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. அதேசமயம், பாரதி ஏர்டெல்லின் ரூ. 1,498 திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும் காலத்திற்கு இலவச நன்மைகளுடன் வேலிடிட்டியை வழங்குகிறது.

ஜியோ பயனர்கள் கவனத்திற்கு.. இனி ''இந்த'' நான்கு திட்டங்கள் ரீசார்ஜ் செய்யக் கிடைக்காது..ஜியோ பயனர்கள் கவனத்திற்கு.. இனி ''இந்த'' நான்கு திட்டங்கள் ரீசார்ஜ் செய்யக் கிடைக்காது..

தினமும் 1 ரூபாய் மட்டுமே செலவு

தினமும் 1 ரூபாய் மட்டுமே செலவு

இத்திட்டத்தைப் பொறுத்த வரையில் பயனர்களுக்குத் தினமும் 1 ரூபாய் செலவில் வரம்பற்ற வாய்ஸ் கால் நன்மை, அதிவேக 2ஜிபி டேட்டா நன்மை, பிறகு 40kbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா நன்மை, தினமும் 100 எஸ்.எம்.எஸ் ஆகியவை கிடைக்கிறது.

நம்பமுடியாத மலிவு விலை திட்டம்

நம்பமுடியாத மலிவு விலை திட்டம்

டெலிகாம் துறையில் கிடைக்கக்கூடிய மிகவும் மலிவான வருடாந்திர திட்டமாக BSNL நிறுவனத்தின் இந்த ரூ.365 திட்டம் செயல்படுகிறது. மலிவு விலையில் வருடம் முழுக்க கவலை இல்லாமல் இருக்க இந்த திட்டத்தைத் தேர்வு செய்யலாம்.

Best Mobiles in India

English summary
BSNL Rs 365 Prepaid Mobile Phone Annual Plan Offer 2GB Data and Unlimited Voice Call Benefits : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X