Home
News

BSNL-க்கு கியூ கட்டுது.. மாதாந்திரம் ரூ.116-க்கு 90 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்.. 30 ஜிபி டேட்டா!

பிஎஸ்என்எல் (BSNL) சிம் கார்ட மாத்தனும்பா என்று சொன்ன காலம்போய் புதுசா பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்கனும்பா என்று சொல்லும் காலம் வந்துவிட்டது. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களின் கஸ்டமர்களே இதை சொல்லும்படி பிஎஸ்என்எல் நிறுவத்தின் திட்டங்கள் இருக்கின்றன. இப்போது, மாதத்துக்கு வெறும் ரூ.116 செலவில் 90 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 30 ஜிபி டேட்டா சலுகையை கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

மலிவான விலைக்கு 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை தேடிக் கொண்டிருக்கும் பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இதுவொரு வாய்ஸ் கால்களுக்கான திட்டம் என்றாலும் டேட்டாவையும் கொடுத்து கஸ்டமர்களை தட்டித்தூக்கி இருக்கிறது. இதேபோல மற்றொரு திட்டமும் இருக்கிறது. அதில் வாய்ஸ் கால்கள் மட்டுமே கிடைக்கிறது.

BSNL-க்கு கியூ கட்டுது.. மாதாந்திரம் ரூ.116-க்கு 90 நாட்கள் வேலிடிட்டி

பிஎஸ்என்எல் ரூ 349 திட்ட விவரங்கள் (BSNL Rs 349 Plan Details): இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டமானது, டேட்டாவுடன் கிடைக்கும் வாய்ஸ் வவுச்சராகும். இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் மூன்று மாதங்கள் முழுவதும் டேட்டா மற்றும் வாய்ஸ் கால்கள் சலுகைகளை இந்த திட்டத்தின் மூலம் பெற்று கொள்ளலாம்.

இதில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகளும், 30 ஜிபி டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த 30 ஜிபி டேட்டாவுக்கு தினசரி லிமிட் கிடையாது. ஆகவே, 90 நாட்கள் வேலிடிட்டியில் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதே நேரத்தில் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது.

90 ஜிபியை வேலிடிட்டி முடியும் முன்பாகவே பயன்படுத்திவிட்டால், இந்த 40 கேபிபிஎஸ் டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்துக்கான மாத செலவை கணக்கிட்டால் வெறும் ரூ.116ஆக மட்டுமே இருக்கிறது. இந்த விலைக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா கிடைப்பது லாபம் தரக்கூடியதாகவே இருக்கிறது. இதுவொரு பிஎஸ்என்எல் ஜிபி2 (BSNL GP2) திட்டமாகும்.

மேலும், எஸ்எம்எஸ் சலுகைகள் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடையாது. இதேபோல வேலிடிட்டியில் தினசரி டேட்டா சலுகை கொண்ட திட்டம் வேண்டுமானால், பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் ரூ.485 விலையில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் அதிக டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆகவே, வேலிடிட்டி மட்டும் 10 நாட்கள் குறைவாக கிடைக்கிறது.

இருப்பினும், சலுகைகள் பட்டையை கிளப்பும்படி இருக்கும். ஆகவே, இந்த பிஎஸ்என்எல் ரூ 485 திட்டத்தை (BSNL Rs 499 Plan) ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 80 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படும். இது 2 மாதங்களுக்கு மேல் 20 நாட்களுக்கு சலுகைகளை கொடுக்க கூடியது. ஆகவே, 80 நாட்களிலும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் நேஷனல் ரோமிங் வாய்ஸ் கால்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

முந்தைய ப்ரீபெய்ட திட்டத்தில் லம்ப்-சம் டேட்டா கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தில் தினசரிக்கு 2 ஜிபி டேட்டா வீதம் 80 நாட்களுக்கும் கொடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும், இந்த திட்டத்துக்கு எஸ்எம்எஸ் சலுகைகளும் பொருந்தும் ஆகவே, 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் நாள்தோறும் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 349 Plan With 90 Days Validity Unlimited Voice Calls 30GB Data Check Cheapest 3 Months Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X