Home
News

ஜியோ, ஏர்டெல் ஓரம்போ.. மலிவு விலையில் 300ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் சலுகைகள்.. அசத்தும் BSNL.. எந்த திட்டம்?

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் அதிக சலுகைகளை வழங்குகிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பிஎஸ்னஎல் நிறுவனத்தின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அதிக டேட்டா மற்றும் அன்லிமிடெட் சலுகைகளை வழங்குகிறது. இங்கே அந்த திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ, ஏர்டெல் ஓரம்போ.. மலிவு விலையில் 300ஜிபி டேட்டா.. அசத்தும் BSNL..

பிஎஸ்என்எல் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 349 Prepaid plan) ஆனது மொத்தமாக 300ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதுவும் இந்த திட்டத்தில் 300ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை.

ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் ரூ.349 விலையில் 300ஜிபி டேட்டா நன்மையை வழங்குவதில்லை. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் 300ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள் மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 70 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ஜியோ, ஏர்டெல் ஓரம்போ.. மலிவு விலையில் 300ஜிபி டேட்டா.. அசத்தும் BSNL..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 485 Prepaid Plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 72 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 144ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். இதுதவிர பல அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன.

அதாவது அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
BSNL Rs 349 Plan Offers 300GB Data, Unlimited Calls and 100 SMS Per Day
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X