Home
News

கம்மி பட்ஜெட்டில் அதிக டேட்டா வழங்கும் இரண்டு BSNL திட்டங்கள்.. மிஸ் பண்ணாதீங்க..

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் சமீபத்தில் 83,629 4ஜி டவர்களை நிறுவியுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2025 ஜூன் மாதத்திற்கு முன் 1 லட்சம் டவர்கள் அமைக்கும் இலக்கு முடிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவையை விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இந்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி சேவையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இரண்டு கம்மி பட்ஜெட் திட்டங்களில் அதிக நன்மைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

கம்மி பட்ஜெட்டில் அதிக டேட்டா வழங்கும் இரண்டு BSNL திட்டங்கள்..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 347 Prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 54 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 108ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதை நினைவில் கொள்ளவும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை பிஎஸ்என்எல் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது.

தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டம். ஆனால் இந்த திட்டத்தில் முன்பு கூடுதல் நன்மைகள் இருந்தது. தற்போது இந்த திட்டத்தில் எந்தவொரு கூடுதல் நன்மையும் இல்லை. தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள் எதிர்பார்க்கும் பயனர்கள் பிஎஸ்என்எல் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Prepaid plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகள் எதுவும் இல்லை. கம்மி பட்ஜெட்டில் அதிக டேட்டா விரும்பும் பயனர்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.

அதபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்வ வரவேற்பு உள்ளது. மேலும் இந்தியாவில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

FAQs
GizBot Technology

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 347, Rs 599 plans offering long validity and unlimited calls: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X