BSNL பக்கம் கூட்டம் குவியுது.. கம்மி பட்ஜெட்ல 160 நாட்கள் வேலிடிட்டி.. தினமும் 2GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்..
ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi), ஜியோ (jio) நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் தொடர்ந்து மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம். அதுவும் கடந்த ஆண்டு தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தின. ஆனால் இதுவரை பிஎஸ்என்எல் நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தவில்லை. இப்போதும் கம்மி விலையில் வழங்கி வருகிறது பிஎஸ்என்எல்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது கம்மி பட்ஜெட்டில் அதிக நன்மைகளைத் தரும் மூன்று திட்டங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் வைத்துள்ளது. இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் சலுகைகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 347 Prepaid plan) ஆனது 54 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கும் இந்த திட்டம். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 108ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் உள்ளன.
அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது பிஎஸ்என்எல்ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும். ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகள் நன்மை எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 485 Prepaid Plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 80 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 160ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகின்றன.
அதாவது அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
பிஎஸ்என்எல் ரூ 997 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 997 Prepaid Plan) 160 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 320ஜிபி டேட்டா நன்மை இதில் உள்ளது. இதுதவிர பல நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.
அதன்படி அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம் . குறிப்பாக தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.


Click it and Unblock the Notifications








