கவனம் ஈர்க்கும் BSNL.. மலிவு விலை.. தினமும் 2ஜிபி டேட்டா.. 54 நாள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. எந்த திட்டம்?
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் விரைவில் ஒரு சில இடங்களில் 3ஜி சேவையை நிறுத்த உள்ளது. அதேசமயம் இந்நிறுவனம் பல முக்கிய இடங்களில் 4ஜி சேவையை வழங்கிவிட்டது. இன்னும் சில மாதங்களில் நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர லைவ் டிவி சேனல், 5ஜி சோதனை உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது பிஎஸ்என்எல்.
மேலும் இதனால் தான் தனியார் டெலிகாம் நிறுவனங்களில் இருந்து பலர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம் பிஎஸ்என்எல் குறைந்த விலையில் 54 நாட்கள் வேலிடிட்டி தரும் ஒரு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இப்போது அந்த திட்டத்தைப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 347 Prepaid plan) தான் 54 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. தினசரி 2ஜிபி டேட்டா வழங்கும் இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் இந்த ரூ 347 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 108ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் உள்ளன.
அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது பிஎஸ்என்எல்ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம். ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகள் நன்மை எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை பட்ஜெட் விலையில் தினமும் 3ஜிபி டேட்டா எதிர்பார்க்கும் பயனர்கள் ரூ.628 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.
அதாவது பிஎஸ்என்எல் ரூ.628 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 628 Prepaid Plan) தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. எனவே நீங்கள் ரூ.628 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த ரூ.628 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர பல அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

அதாவது சேலஞ்சர் அரினா (Challenger Arena), ஹார்டி கேம்ஸ் (Hardy Games), ஜிங்க்(Zing) பிஎஸ்என்எல் டியூன், ஆஸ்ட்ரோடெல் (Astrotell), வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்குகிறது இந்த அட்டகாசமான பிஎஸ்என்எல் ரூ.628 ப்ரீபெய்ட் திட்டம்.
மேலும் கடந்த டிசம்பர் மாதம் வெளியான தகவலில், பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியாவில் 62,201 4ஜி டவர்களை நிறுவியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு2025 ஜூன் மாதத்திற்கு முன் 1 லட்சம் டவர்கள் அமைக்கும் இலக்கு முடிக்கப்படும் என்றார் ஜோதிராதித்ய சிந்தியா. அதேபோல் 4ஜி தளங்களை அமைப்பதற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), தேஜாஸ் நெட்வொர்க்ஸ்,டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையம் (சி-டாட்), ஐடிஐ லிமிடெட் போன்ற இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்துள்ளது.
photo credit: kindpng, BSNL


Click it and Unblock the Notifications








