Home
News

BSNL போட்ட போடு.. இதை மட்டும் உடனே பண்ணுங்க.. 50 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா!

பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்கள் பட்ஜெட் போட்டு ரீசார்ஜ் செய்ய திட்டமிட்டால், 50 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களுடன் ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. அதேபோல சிம் ஆக்டிவ் மற்றும் அதிக டேட்டாவும் மலிவான விலைக்கு திட்டம் கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 347 திட்ட விவரங்கள் (BSNL Rs 347 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 50 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்கள் முழுவதும் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கும். டேட்டாவை பார்க்கையில், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.

BSNL போட்ட போடு.. இதை மட்டும் உடனே பண்ணுங்க.. 50 நாட்கள் வேலிடிட்டி!

இதில் 50 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைப்பதால், மொத்தமாக 100 ஜிபி டேட்டாவை பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இந்த டேட்டாவை 4ஜி வேகத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த பட்ஜெட் ஃபிட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது.

தினமும் 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம். இந்த சலுகைகளே கொடுக்கப்படுகிறது. ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்களில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவுடன் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களே ரூ.350 விலைக்கும் மேல் கிடைக்கிறது. ஆனால், இதில் 50 நாட்கள் வேலிடிட்டி கொடுத்தும் மலிவாக கிடைக்கிறது.

இதனாலேயே பிஎஸ்என்என் நிறுவனம், இதை பட்ஜெட் ஃபிட் திட்டம் (Budget Fit Plan) என்கிறது. இதைவிட அதிக வேலிடிட்டி வேண்டும், அதில் டேட்டா சலுகை இல்லையென்றாலும் பரவாயில்லை என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இதில் 80 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ 439 திட்ட விவரங்கள் (BSNL Rs 439 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா சலுகை மட்டும் கொடுக்கப்படாது. மற்றபடி எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கும். அதே நேரத்தில் தினசரிக்கு எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படாது. மொத்தமாக கொடுக்கப்பட்டுவிடும். இதை தேவைக்கு ஏற்ப கஸ்டமர்கள் அனுப்கி கொள்ள வேண்டும்.

ஏனென்றால், இந்த திட்டத்துக்கு 80 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு வேலிடிட்டி வருகிறது. இந்த நாட்கள் முழுவதுக்கும் 300 எஸ்எம்எஸ்கள் மட்டுமே கிடைக்கும். ஆனால், முந்தைய திட்டத்தை போல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகைகள் இந்த திட்டத்துக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நாட்கள் முழுவதும் சிம் ஆக்டிவ் கிடைக்கும். இதுவொரு வாய்ஸ் ஒன்லி திட்டமாகவும் இருக்கிறது. இதேபோல வேலிடிட்டியில் தினசரி டேட்டாவுடன் ஏதாவது திட்டம் இருக்கிறதா என்று கேட்டால், அவர்களுக்கு பிஎஸ்என்எல் ரூ 485 திட்டம் பக்கா தேர்வாக இருக்கும். இதில் தினசரி டேட்டாவுடன் அதிக வேலிடிட்டி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 485 திட்ட விவரங்கள் (BSNL Rs 485 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா கிடைப்பதால், இதற்கு 72 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் 2 ஜிபி டேட்டாவை நாளொன்றுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா இந்த திட்டத்துக்கும் கிடைக்கிறது.

முந்தைய திட்டத்தை போல் மொத்தமாக கொடுக்கப்படாமல், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் இதற்கு கிடைக்கிறது. மேலும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் இந்த திட்டத்துக்கும் கிடைக்கிறது. ஆகவே, இதில் பட்ஜெட் விலைக்கும், சிம் ஆக்டிவுக்கும் மற்றும் அதிக டேட்டாவுக்கும் என்று ப்ரீபெய்ட் திட்டங்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 347 Plan With Unlimited Voice Calls 50 Days Validity 2GB Data Check BSNL Budget Fit Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X