Home
News

ஒரே BSNL ரீசார்ஜ்.. இனி 50 நாளுக்கு அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி தினசரி டேட்டா.. விலை எப்படி?

பிஎஸ்என்எல் (BSNL) சிம் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஒரே ஒரு ரீசார்ஜ் வழியாக அடிமட்ட விலையில் அலிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினசரி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இது போக எஸ்எம்எஸ் சலுகை மற்றும் சிம் ஆக்டிவ் மலிவான விலைக்கு கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்டு திட்டத்தின் முழு சலுகை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஒரு மாத வேலிடிட்டி வேண்டாம், அதேபோல 2 மாத வேலிடிட்டியும் வேண்டாம், இதற்கு இடையில் மலிவான விலைக்கு ஏதாவது ரீசார்ஜ் திட்டம் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் ரூ 347 திட்டம் (BSNL Rs 347 Plan) பக்காவான தேர்வாக இருக்கும். ஏனென்றால் இதில் 50 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது.

ஒரே BSNL ரீசார்ஜ்.. இனி 50 நாளுக்கு அன்லிமிடெட் வாய்ஸ்.. 2ஜிபி டேட்டா!

பிஎஸ்என்எல் ரூ 347 திட்ட விவரங்கள் (BSNL Rs 347 Plan Details): முன்பே சொன்னதைப் போல இதில் அதிக வேலிடிட்டி மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் என்று முக்கிய மூன்று சலுகைகளும் கிடைக்கும். இந்த திட்டத்திற்கு 50 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது என்றால், அந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கொடுக்கப்படும். இது அனைத்து நெட்வொர்க்குக்கும் பொருந்தும்.

இதில் அன்லிமிடெட் லோக்கல் கால்கள் (Unlimited Local Calls) முதல் எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களும் (Roaming Voice Calls) கிடைக்கும். வாய்ஸ் கால்கள் கொடுக்கப்பட்டாலே அந்தத் திட்டத்தில் சிம் ஆக்டிவ் ( SIM ACTIVE) கிடைக்கும். ஆகவே இதிலும் சிம் ஆக்டிவ் கிடைக்கிறது. டேட்டாவிலும் பட்ஜெட்டை விட கூடுதல் சலுகைகள் கிடைக்கின்றன. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆகவே, மொத்தமாக 50 நாட்களுக்கு 100 ஜிபி டேட்டாவை இந்த திட்டத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த டேட்டா சலுகை போக‌ ஃபேர் யூசேஜ் பாலிசி‌யின்‌ கீழ் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்த போஸ்ட் டேட்டாவை அன்றைக்கு ஒதுக்கப்படும் 2 ஜிபி டேட்டா முடிந்த பிறகு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஆகவே, இந்த திட்டத்தில் முக்கியமான டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களில் குறையில்லை. எஸ்எம்எஸ் சலுகைகளை பார்க்கையில், வழக்கமான ப்ரீபெய்டு திட்டங்களில் கிடைக்கும்படி நாளொன்றுக்கு 100 என்னும் கணக்கில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் திட்டத்திற்கு 50 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதைவிட அதிக வேலிடிட்டி வேண்டுமானால் மற்றொரு திட்டம் இருக்கிறது. இந்தத் திட்டத்தின் சலுகைகளை இப்போது பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ 319 திட்ட விவரங்கள் (BSNL 319 Plan Details): இந்த ப்ரீபெய்டு திட்டத்தில் முந்தைய திட்டத்தை விட அதிக வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், அதற்கு ஏற்ப டேட்டா சலுகை குறைவாக கிடைக்கும். அதாவது, முந்தைய திட்டத்தில் 50 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தது. இந்தத் திட்டத்துக்கு 60 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே கம்மியான விலையில் கூடுதல் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

இருப்பினும் இந்த திட்டத்தில் மொத்தமாகவே 10 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். அதுவும் லம்ப்-சம் சலுகையில் கொடுக்கப்படும். இந்த 10 ஜிபி டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டா கிடைக்கும். எஸ்எம்எஸ் சலுகையும் அப்படித்தான். தினசரிக்கு கிடைக்காது மொத்தமாக 300 எஸ்எம்எஸ் மட்டுமே கிடைக்கும். டேட்டா தேவையில்லை வேலிடிட்டி மட்டும் அதிகமாக கிடைத்தால் போதும் என்று கேட்கும் கஷ்டம் அவர்களுக்கு இந்த திட்டம் சரியாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 347 Plan With Unlimited Voice Calls 2GB Daily Data Check BSNL 50 Days Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X