Home
News

இனிமே 54 நாட்களுக்கு என்ஜாய்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. தினமும் 2 ஜிபி டேட்டா.. BSNL-க்கு ஒரே ரீசார்ஜ்!

இந்திய டெலிகாம் மார்கெட்டில் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற எந்தவொரு தனியார் நிறுவனமும் கொடுக்க முடியாத விலைக்கு மத்திய தொலைத்தொடர்பு துறையின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் 54 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) கொடுக்கிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 347 திட்ட விவரங்கள் (BSNL Rs 347 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு டேட்டா மற்றும் வாய்ஸ் கால்கள் குறையில்லாமல் கிடைக்கிறது. அதாவது, 54 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இந்த 2 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், அதற்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் கிடைக்கிறது.

இனிமே 54 நாட்களுக்கு என்ஜாய்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி!

ஆகவே, 108 ஜிபி டேட்டாவை வேலிடிட்டி முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டா போக 54 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming Calls) பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். இந்த வாய்ஸ் கால்கள் அனைத்து நெட்வொர்க்குக்கும் பொருந்த கூடியதாகும். இதற்கு அடுத்து எஸ்எம்எஸ் சலுகை வருகிறது.

100 எஸ்எம்எஸ்களை நாளொன்றுக்கு அனுப்பி கொள்ள முடிகிறது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவுடன் மற்ற நிறுவனத்தில் திட்டங்களை பெறலாம், 28 நாட்கள் அல்லது அதிகபட்சம் ஒரு மாதம் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மட்டுமே 54 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. இதேபோல 80 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் இருக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 485 திட்ட விவரங்கள் (BSNL Rs 485 Plan Details): இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்திலும் கிட்டத்தட்ட முந்தைய திட்டத்தில் கிடைத்த அனைத்து சலுகைகளும் கிடைக்கிறது. ஆனால், வேலிடிட்டி மட்டும் விலைக்கு ஏற்ப கூடுதலாக கிடைக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 80 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

இந்த 80 நாட்கள் முழுவதும் பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை அனைத்து நெட்வொர்க்கிலும் செய்து கொள்ள முடியும். முந்தைய திட்டத்தை போலவே நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அதற்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. ஆகவே, 80 நாட்களுக்கு 160 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும்.

இதுபோக முந்தைய திட்டத்தில் கிடைத்த 100 எஸ்எம்எஸ் சலுகையும் இந்த திட்டத்தில் தினசரிக்கு கிடைக்கிறது. ஆகவே, கிட்டத்தட்ட 2 மாதங்கள் அல்லது 3 மாதங்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டமானது அடிமட்ட விலைக்கு வேண்டுமானால், மேற்கண்ட 2 திட்டங்களில் ஒன்றை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். 160 நாட்களுக்கு வேலிடிட்டி வேண்டுமானால் மற்றொரு திட்டம் உள்ளது.

பிஎஸ்என்எல் ரூ 997 திட்ட விவரங்கள் (BSNL Rs 997 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் முந்தைய திட்டத்தைவிட டபுள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 160 நாட்கள் முழுவதும் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை பெற்று கொள்ளலாம். 2 ஜிபி டேட்டா, 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 347 Plan With Unlimited Voice Calls 2GB Daily Data 54 Days Validity Check Cheapest Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X