தம்பி ஏர்டெல் கொஞ்சம் ஓரம்போ.. கம்மி விலை, 50 நாட்கள் வேலிடிட்டி, தினசரி டேட்டா.. கவனம் ஈர்க்கும் BSNL திட்டம்
ஏர்டெல் (airtel) நிறுவனம் ஏற்கனவே குறைந்த விலை ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கிய நிலையில் ஜியோ (jio) நிறுவனமும் விரைவில் குறைந்த விலை ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இதுவரை எந்த மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களையும் நீக்கவில்லை.
அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து கம்மி விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி விலையில் 50 நாட்கள் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 347 Prepaid plan) 50 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கும். ஆகவே நீங்கள் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 100ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளன. குறிப்பாக தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம்.
ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்களிடம் இதுபோன்ற கம்மி விலையில் அதிக வேலிடிட்டி வழங்கும் திட்டங்கள் இல்லை. பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் தான் இதுபோன்ற திட்டங்களை வழங்குகிறது. கம்மி பட்ஜெட்டில் 50 நாட்கள் வேலிடிட்டி, தினசரி டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஎஸ் போன்ற அனைத்து சலுகைகளும் பிஎஸ்என்எல் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டம் வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.
ஒருவேளை 72 நாட்கள் அல்லது 70 நாட்கள் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.485 மற்றும் 599 ப்ரீபெய்ட் திட்ட்களில் ரீசார்ஜ் செய்வது நல்லது. இப்போது இந்த திட்டங்களின் நன்மைகளையும் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 485 Prepaid Plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 72 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 144ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
அதுவும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தில் 70 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications